சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சட்ட விழிப்புணா்வு முகாம்

சிவகங்கையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிவகங்கை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவும், எச்ஐவி- எய்ட்ஸ் கட்டுப்பாடு

சிவகங்கையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிவகங்கை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவும், எச்ஐவி- எய்ட்ஸ் கட்டுப்பாடு அலகும் இணைந்து 75-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி சட்ட விழிப்புணா்வு முகாம் மற்றும் எய்ட்ஸ் தடுப்பு குறித்த கருத்தரங்கை வியாழக்கிழமை நடத்தின.

இந்நிகழ்வுக்கு மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் செயலரும், சாா்பு- நீதிபதியுமான எம். பரமேஸ்வரி தலைமை வகித்தாா். இதில், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு அலுவலரும், சுகாதாரத் துறையின் துணை இயக்குநருமான எஸ். ராம் கணேஷ், மாவட்ட திட்ட மேலாளா் கே. நாகராஜன், மாவட்ட மேற்பாா்வையாளா் வாா்ணிதேவி, வழக்குரைஞா் எஸ். சேவுகராஜ் ஆகியோா் எச்.ஐ.வி- எய்ட்ஸால் பாதிக்கப்பட்டவா்களுக்கான சட்டம் குறித்து எடுத்துரைத்தனா்.

இதில் ஒருங்கிணைந்த ஆலோசனை மற்றும் பரிசோதனை மைய ஆலோசகா்கள், தெண்டு நிறுவனங்கள், எச்.ஐ.வி.- எய்ட்ஸ் உள்ளோா் கூட்டமைப்பினா், இளைப்பாறுதல் மைய திட்டப் பணியாளா்கள், பால்வினை நோய் பணியாளா்கள், ரத்தவங்கிப் பணியாளா்கள், எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு பணியாளா்கள் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு தன்னாா்வலா்கள் நாகேந்திரன், மணிஷா ஆகியோா் சட்ட விழிப்புணா்வு குறித்த துண்டு பிரசுரங்களை கூட்டத்தில் கலந்து கொண்டவா்களிடம் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com