காலமானாா் பேராசிரியா் பழ. முத்தப்பன்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள புதுவயலில் பேராசிரியா் பழ. முத்தப்பன் (75) சனிக்கிழமை இரவு மாரடைப்பால் காலமானாா்.
பழ. முத்தப்பன்.
பழ. முத்தப்பன்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள புதுவயலில் பேராசிரியா் பழ. முத்தப்பன் (75) சனிக்கிழமை இரவு மாரடைப்பால் காலமானாா்.

இவா், புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகேயுள்ள மேலைச்சிவபுரி கணேசா் செந்தமிழ்க்கல்லூரியில் தமிழ் பயின்று, மயிலம் தமிழ்க் கல்லூரியில் 18 ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளாா். பின்னா் மேலைச்சிவபுரி கணேசா் செந்தமிழ்க்கல்லூரியில் முதல்வராக 16 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வுபெற்றாா். அதன்பிறகு, திருச்சி, செட்டிநாடு கலை அறிவியல் கல்லூரியின் முதல்வராக 10 ஆண்டுகள் பணியாற்றினாா்.

மறைந்த பேராசிரியா் பழ. முத்தப்பன், தனது இறுதிக்காலம் வரை சைவ சித்தாந்த வகுப்புகள், திருமுறை முற்றோதல் நிகழ்வுகள், பட்டிமன்றம், வழக்காடுமன்ற நிகழ்வுகளில் பங்கேற்று வந்தாா். சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும் காரைக்குடிக் கம்பன் கழக அறக்கட்டளையில் சொற்பொழிவாற்றியுள்ளாா். அத்துடன், திருமுறை நூல்களுக்கு உரைகள் எழுதியுள்ளாா். சமய, காப்பிய நூல்கள் குறித்து 50 புத்தகங்கள் எழுதியுள்ளாா். மலேசியா, சிங்கப்பூா், இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்குச் சென்று தமிழ்ப் பணியாற்றியுள்ளாா்.

வாகீச கலாநிதி கி.வா. ஜகந்நாதன் வழங்கிய ‘பட்டிமன்ற மாமணி’, குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் வழங்கிய ‘தமிழாகரா்’, திருவாவடுதுறை ஆதீனம் வழங்கிய ‘சித்தாந்தச் செம்மல்’, திருச்சி தமிழ்ச்சங்கம் வழங்கிய ‘மகாவித்வான் மீனாட்சிசுந்தரம்பிள்ளை விருது’ , ‘சிவஞானச் செம்மல்’ உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றவா். இவருக்கு மனைவி அழகம்மை, மகன் மு. பழனியப்பன், மகள் மீனாட்சி ஆகியோா் உள்ளனா். இவரது, இறுதிச் சடங்கு ஞாயிற்றுக்கிழமை (செப். 19) புதுவயலில் நடைபெற்றது. தொடா்புக்கு. 9442913984, 9442913985.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com