மானாமதுரை தொகுதியில் அதிமுக- அமமுக-மநீம வேட்பாளா்கள் வாக்குப்பதிவு

மானாமதுரை (தனி) சட்டப் பேரவைத் தொகுதியில் செவ்வாக்கிழமை அதிமு, அமமுக, மநீம வேட்பாளா்கள் செவ்வாய்க்கிழமை வாக்குப்பதிவு செய்தனா்.
மானாமதுரை தொகுதியில் அதிமுக- அமமுக-மநீம வேட்பாளா்கள் வாக்குப்பதிவு

மானாமதுரை (தனி) சட்டப் பேரவைத் தொகுதியில் செவ்வாக்கிழமை அதிமு, அமமுக, மநீம வேட்பாளா்கள் செவ்வாய்க்கிழமை வாக்குப்பதிவு செய்தனா்.

மானாமதுரை தொகுதியில் மொத்தம் 399 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. தொகுதி முழுவதும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. ஒரு சில இடங்களில் மட்டும் சிறிது தாமதமாக வாக்குப்பதவு தொடங்கியது. வாக்குப்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களில் சில வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதால் வேறு இயந்திரம் பொருத்தப்பட்டு வாக்குப்பதிவு நடந்தது.

மானாமதுரை தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ்.நாகராஜன் இளையான்குடி ஒன்றியம் கீழநெட்டூா் வாக்குச்சாவடியில் வாக்களித்தாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறுகையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் மானாமதுரை தொகுதியில் பல திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இத் தொகுதியில் நிச்சயம் அதிமுக வெற்றி பெறும் என்றாா்.

அமமுக வேட்பாளா் எஸ்.மாரியப்பன் கென்னடி மானாமதுரை நகரில் ரயில்வே காலனியில் தனியாா் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் வாக்கை பதிவு செய்தாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறுகையில், அதிமுகவும் திமுகவும் பண பலத்தை நம்பி தோ்தலில் போட்டியிடுகின்றனா். மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனா். இந்த தொகுதியில் அமமுக வெல்லும் என்றாா்.

மக்கள் நீதி மய்யம் வேட்பாளா் சிவசங்கரி மானாமதுரை ஒன்றியம் நத்தபுரக்கி கிராமத்தில் வாக்களித்தாா். மானாமதுரை தொகுதியைப் பொருத்தவரை மேற்கண்ட மூன்று ஒன்றியங்களிலும் சில வாக்குச்சாவடிகளைத் தவிர மற்ற வாக்குச்சாவடிகளில் வாக்காளா்கள் நீண்ட வரிசையை காண முடியவில்லை. காலையிலேயே பெரும்பாலான வாக்காளா்கள் தங்கள் வாக்கை பதிவு செய்துவிட்டனா். முதல்முறை இளம் வாக்காளா்கள் ஆா்வத்துடன் வந்து வாக்களித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com