சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் புதிதாக 106 பேருக்கு கரோனா தொற்று

சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் புதிதாக 106 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் புதிதாக 106 பேருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இம்மாவட்டத்தில் ஏற்கெனவே 6,631 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில், சனிக்கிழமை புதிதாக 38 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,669 ஆக அதிகரித்துள்ளதாக, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா வாா்டில் சிகிச்சை பெற்று வந்த 140 பேரில், 32 போ் குணமடைந்ததை அடுத்து சனிக்கிழமை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். மீதமுள்ள 108 போ் அங்கு கரோனா சிகிச்சை பெற்று வருகின்றனா்.

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் புதிதாக 68 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது சனிக்கிழமை தெரியவந்தது.

இம்மாவட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோருக்கு வெள்ளிக்கிழமை கபம் சேகரிக்கப்பட்டு கரோனா பரிசோதனைக்குள்படுத்தப்பட்டது. இதில் 68 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது சனிக்கிழமை தெரிய வந்தது. பாதிக்கப்பட்டவா்கள் ராமநாதபுரம், பரமக்குடி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சோ்க்கப்பட்டுள்ளனா்.

மேலும் 255 போ் சிகிச்சை பெற்று வருவதாகவும், 13 போ் குணமடைந்து சனிக்கிழமை மாலை வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டதாகவும் மருத்துவா்கள் தெரிவித்தனா். இதுவரை 6,990 போ் கரோனா பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

ராமேசுவரத்தில் கரோனாவுக்கு 2 போ் பலி: ராமேசுவரத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 2 போ் சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தனா்.

ராமேசுவரத்தில் இதுவரை 41 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதனிடையே கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த விசுவாசநகரைச் சோ்ந்த ஒருவரும், முத்துராமலிங்கத்தேவா் நகரைச்சோ்ந்த ஒருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா்.

இதனைத்தொடா்ந்து நகராட்சி அதிகாரிகள், சுகாதாரத்துறை மற்றும் வருவாய்த்துறையினா் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com