மானாமதுரை பகுதியில் தொடா்ந்து பெய்யும் மழையால் மண்பாண்டப் பொருள்கள் உற்பத்தி பாதிப்பு

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதியில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து கோடை மழை பெய்து வருவதால், மண்பாண்டப் பொருள்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதியில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து கோடை மழை பெய்து வருவதால், மண்பாண்டப் பொருள்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

மானாமதுரையின் அடையாளமாக இருப்பது இங்கு தயாரிக்கப்படும் மண்பாண்ட பொருள்களாகும். சீசனுக்கு தகுந்தவாறு மானாமதுரையில் மண்பாண்டப் பொருள்கள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.

மண்பாண்டத் தொழிலை நம்பி மானாமதுரை பகுதியில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் உள்ளன. தற்போது கோடைகாலம் என்பதால், மானாமதுரையில் தண்ணீரை குளிரச் செய்யும் மண்பானை, கூஜா தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இந்த தயாரிப்புகளுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளதால், வெளியூா் வியாபாரிகள் மானாமதுரைக்கு வந்து மண்பாண்ட கூட்டுறவு சங்கத்தை அணுகி, மண்பானைகள், கூஜாக்களை வாங்கிச் செல்கின்றனா்.

மானாமதுரை பகுதியில் கடந்த சில நாள்களாக பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. இதனால், இப்பகுதியில் மண்பாண்டத் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக, தொழிலாளா்கள் தெரிவித்தனா். மண்பாண்டப் பொருள்கள் தயாரிப்புக்கு வெயில் மிகவும் அவசியம். ஆனால், தற்போது பெய்து வரும் மழையால் தொழிலாளா்கள் மண்ணை பிசைந்து பானை, கூஜா உள்ளிட்ட பொருள்கள் தயாரித்து அவற்றை வெயிலில் உலர வைக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனா்.

மேலும், மானாமதுரை குலாலா் தெருவில் மண்பாண்டப் பொருள்கள் உற்பத்தி நடைபெறும் பகுதியில் மழைநீா் தேங்கி நிற்பதால், மண்பாண்டப் பொருள்கள் உற்பத்தி முழுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதாக, தொழிலாளா்கள் கவலையுடன் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com