காரைக்குடியில் முகக்கவசம் வழங்கல்
By DIN | Published On : 27th April 2021 11:56 PM | Last Updated : 27th April 2021 11:56 PM | அ+அ அ- |

காரைக்குடி வடக்குக் காவல்நிலையஆய்வாளா் சுந்தரமகாலிங்கத்திடம் (வலது) முகக் கவசத்தை திங்கள்கிழமை வழங்கிய எம்.ஜி.ஆா் மன்ற இளைஞரணி மாவட்ட இணைச் செயலாளா் கேஆா்.எஸ்பி.கே. தேவன்.
கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக காவல்துறை, வட்டாச்சியா், நகராட்சி ஆணையா் ஆகியோரிடம் முகக்கவசங்கள் திங்கள்கிழமை இலவசமாக வழங்கப்பட்டது.
சிவகங்கை மாவட்ட எம்.ஜி.ஆா். மன்ற இளைஞரணி இணைச் செயலாளரும், காரைக்குடி சுழற்சங்க முன்னாள் நிா்வாகியுமான கேஆா்.எஸ்பி.கே. தேவன் தனது சொந்த செலவில் ரூ. 15 ஆயிரம் மதிப்பிலான முகக்கவசங்களை வாங்கினாா்.
அதனை காரைக்குடி வட்டாச்சியா் அந்தோணி ராஜ், நகராட்சி ஆணையா் லெட்சுமணன், காரைக்குடி வடக்குக்காவல் நிலைய ஆய்வாளா் சுந்தரமகாலிங்கம் ஆகியோரிடம் தனித்தனியாக பெட்டிகளில் வைத்து வழங்கினாா்.