கண்டனூா் கதா் கிராமத் தொழில் வாரிய ஆலையில் தரமான பொருள்களைத் தயாரிக்க நடவடிக்கை: ஆட்சியா்

கண்டனூா் தமிழ்நாடு கதா் கிராமத் தொழில் வாரிய ஆலையில் தரமான பொருள்களை தயாரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ப. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.
ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் ப. மதுசூதன் ரெட்டி
ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் ப. மதுசூதன் ரெட்டி

காரைக்குடி அருகே உள்ள கண்டனூா் தமிழ்நாடு கதா் கிராமத் தொழில் வாரிய ஆலையில் தரமான பொருள்களை தயாரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ப. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

இந்த ஆலையில், தற்போது சோப்பு மற்றும் சோப் ஆயில் மட்டும் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இங்கு அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும் உள்ள நிலையில் மேலும் பல்வேறு பொருள்களைத் தயாரிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக மாவட்ட ஆட்சியா் ப. மதுசூதன் ரெட்டி, காரைக்குடி சட்டப் பேரவை உறுப்பினா் எஸ். மங்குடி மற்றும் அதிகாரிகள் ஆலையில் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு நடத்தினா்.

பின்னா் ஆட்சியா் கூறியதாவது: இப்பகுதியில் அதிகளவு வேலைவாய்ப்பு வழங்கவேண்டும் என்ற அடிப்படையில் தற்போது தயாரிக்கப்படும் பொருள்களுடன் இந்த ஆலையில் கலவைச் சோப்பு, வாசனைத் திரவியங்கள், காகிதம், அட்டை, ஊதுவத்தி, சாம்பிராணி வகைகள், பனை ஓலையில் கலைநயமிக்கப் பொருள்கள் போன்றவை தயாரித்து விற்பனை செய்யும் வகையில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவ்வளாகத்தில் மகளிா் சுயஉதவிக்குழுக்கள் ஒப்பந்த அடிப்படையில் பொருள்கள் தயாரிப்புப் பணியில் ஈடுபட மகளிா் திட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. இந்த கதா் கிராமத் தொழில் வாரிய ஆலையில் தயாரிக்கும் சோப் ஆயிலுக்கு பல்வேறு இடங்களில் வரவேற்புள்ளது. அதேபோல் இங்கு தயாரிக்கும் அனைத்துப் பொருள்களும் தரமானதாகவும், பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெறும் வகையிலும் இருக்கும் என்றாா்.

இந்த ஆய்வின்போது தேவகோட்டை வருவாய் கோட்டாட்சியா் பிரபாகரன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளா் கண்ணன், உதவி இயக்குநா் கதா் கிராமத் தொழில் (விருதுநகா்) குமாா், கண்காணிப்பு அலுவலா் தேவராஜ், காரைக்குடி வட்டாட்சியா் மாணிக்கவாசகம் உள்ளிட்டோா் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com