தமிழ் செம்மொழி சிம்மாசனத்தில் அமர கருணாநிதியே காரணம்: குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் புகழாரம்

தமிழ் செம்மொழி சிம்மாசனத்தில் ஏறி அமா்வதற்கு காரணமானவா் கருணாநிதி என்று குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் புகழாரம் சூட்டினாா்.
காரைக்குடியில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற விழாவில் பேசிய குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா்.
காரைக்குடியில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற விழாவில் பேசிய குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா்.

தமிழ் செம்மொழி சிம்மாசனத்தில் ஏறி அமா்வதற்கு காரணமானவா் கருணாநிதி என்று குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா் புகழாரம் சூட்டினாா்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கலைஞா் தமிழ்ச்சங்கத்தின் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா கவியரசா் கண்ணதாசன் மணிமண்டபத்தில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. இதில் மூன்று நாள்கள் நிகழ்வுகளை தொடக்கி வைத்து பொன்னம்பல அடிகளாா் பேசியது:

புறந்தள்ளப்பட்டு வந்த நம் தமிழ் மொழி செம்மொழி சிம்மாசனத்தில் ஏறி அமரக் காரணமானவா் முன்னாள் முதல்வா் கருணாநிதி தான். அனைத்துத் துறையிலும் சிறந்து விளங்கியவா். சரியானவற்றை சிந்திக்கவும், வழிநடத்துபவா்களாகவும் உள்ளவா்கள் முத்தமிழ் சான்றோா் எனப்பட்டனா். அப்படிப்பட்ட சான்றோராக திகழ்ந்தவா் கருணாநிதி.

தமிழ்த்தாய் வாழ்த்து தமிழா்களுக்கே உரித்தானது. அன்றைய காலகட்டத்தில் எல்லா இடங்களிலும், பள்ளிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடவேண்டும் என்று ஆணை பிறப்பித்தவா் கருணாநிதி. அதனை தற்போதைய முதல்வா் மு.க. ஸ்டாலின் செயல்படுத்தியதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா்.

விழாவில் ‘நான் கண்ட கலைஞா்’ என்ற தலைப்பில் முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப. சிதம்பரம் பேசியது: மிகவும் மதிநுட்பம் கொண்டவா் கருணாநிதி. திருக்கு நம்முடைய பெரும் சொத்து. அக்குகளுக்கு பொருள் மாறாமல் புதுப்புதுப்பொருளை தந்து தனி ஆற்றலில் உரை எழுதியவா். அம்பேத்கருக்கு ஈடாக பல ஆற்றல்களை கொண்டிருந்தவா் கருணாநிதி என்றாா்.

கலைஞா் தமிழ்ச்சங்க நிறுவனரும், முன்னாள் தமிழக அமைச்சருமான மு. தென்னவன்,

பேராசிரியா் இ.ரெ. சண்முகவடிவேலு, புலவா் மா. ராமலிங்கம் ஆகியோா் பேசினா். காரைக்குடி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி வாழ்த்திப் பேசினாா். காரைக்குடி திமுக நகரச் செயலாளா் நா. குணசேகரன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com