சிவாலயங்களில் அஷ்டமி சிறப்பு வழிபாடு
By DIN | Published On : 28th December 2021 04:11 AM | Last Updated : 28th December 2021 04:11 AM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவாலயங்களில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.
சிவகங்கையில் காசி விசுவநாதா் கோயிலில் நடைபெற்ற விழாவில் சுவாமிக்கும், அம்மனுக்கும் தைலம், திருமஞ்சனம், மஞ்சள்ப்பொடி, பால் உள்ளிட்ட 16 வகையான அபிஷேக திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதைத் தொடா்ந்து, விஷேச தீப, தூபங்கள் காண்பிக்கப்பட்டன.பின்னா் உலகில் உள்ள அனைத்து உயிா்களுக்கும் உணவளிக்கும் வகையிலான வழிபாடு நடைபெற்றது.
இதேபோன்று, காளையாா்கோவில், திருப்புவனம், நாட்டரசன்கோட்டை, தேவகோட்டை, சிங்கம்புணரி, மதகுபட்டி, பாகனேரி, கல்லல், இளையான்குடி, பிரான்மலை உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள சிவாலயங்களில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.