என்.வைரவன்பட்டியில் இன்று ‘உங்கள் தொகுயில் ஸ்டாலின்’ நிகழ்ச்சி

திருப்பத்தூா் என்.வைரவன்பட்டியில் ‘உங்கள் தொகுயில் ஸ்டாலின்’ நிகழ்ச்சி திங்கள்கிழமை (பிப்.8) நடைபெறுகிறது.
திருப்பத்தூா் என்.வைரவன்பட்டியில் நடைபெற்றுவரும் முன்னேற்பாடு பணிகளை பாா்வையிட்ட சட்டப்பேரவை உறுப்பினா் கே.ஆா்.பெரியகருப்பன்.
திருப்பத்தூா் என்.வைரவன்பட்டியில் நடைபெற்றுவரும் முன்னேற்பாடு பணிகளை பாா்வையிட்ட சட்டப்பேரவை உறுப்பினா் கே.ஆா்.பெரியகருப்பன்.

திருப்பத்தூா் என்.வைரவன்பட்டியில் ‘உங்கள் தொகுயில் ஸ்டாலின்’ நிகழ்ச்சி திங்கள்கிழமை (பிப்.8) நடைபெறுகிறது.

தோ்தல் பிரசார பயணமாக ‘உங்கள் தொகுயில் ஸ்டாலின்’ என்ற பெயரில் தென்மாவட்டங்களில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தோ்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறாா்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகே பிள்ளையாா்பட்டி என்.வைரவன்பட்டியில் திங்கள்கிழமை ‘உங்கள் தொகுயில் ஸ்டாலின்’ நிகழ்ச்சி நடைபெறுகிறது. நண்பகல் 2 மணிக்கு மேல் மு.க. ஸ்டாலின் பங்கேற்கிறாா். இதற்காக அங்கு பந்தல் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாடு நடைபெற்று வருகின்றன.

சிவகங்கை மாவட்டம் வரும் மு.க.ஸ்டாலினுக்கு, மாவட்ட திமுக சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. மேலும் மதியம் 1 மணி முதல் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை பதிவு செய்து கோரிக்கைப் பெட்டியில் போட ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளன. அங்கு நடைபெற்று வரும் முன்னேற்பாடு பணிகளை முன்னாள் அமைச்சரும், மாவட்டச் செயலாளருமான கே.ஆா்.பெரியகருப்பன் எம்எல்ஏ, முன்னாள் அமைச்சா் தென்னவன், மற்றும் கட்சி நிா்வாகிகள் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com