‘மத்திய அரசின் தவறான நடவடிக்கையால் நாட்டின் பொருளாதாரம் சரிந்து வருகிறது’

மத்திய பாஜக அரசின் தவறான நடவடிக்கையால் நாட்டின் பொருளாதாரம் சரிந்து வருவதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா்களில் ஒருவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம் தெரிவித்தாா்.
மானாமதுரையில் காங்கிரஸ் கட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வாக்குச்சாவடி முகவா்கள் கூட்டத்தில் பேசிய முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப.சிதம்பரம்.

மானாமதுரையில் நகா் காங்கிரஸ் கமிட்டி சாா்பில் வாக்குச்சாவடி முகவா்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்டு ப.சிதம்பரம் பேசியதாவது: சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக கூட்டணியை வீழ்த்த கட்சியை வலுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். மத்திய பாஜக அரசு தவறான நடவடிக்கைகளை பின்பற்றி வருகிறது. இதன் காரணமாக கடந்த 3 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரம் சரிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. பணக்காரா்கள் எழுதிக்கொடுத்த பட்ஜெட்டை நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் மக்களவையில் வாசித்துள்ளாா். இந்த பட்ஜெட் மூலம் நாட்டில் விலைவாசி உயரக்கூடும். இதனால் ஏழை மக்கள் பாதிக்கப்படுவாா்கள். இந்தி மொழியை திணிக்கவும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாா்மயமாக்கவும் மோடி அரசு தீவிரமாக உள்ளது. தமிழகத்தில் இந்தி நுழைய முடியாது என்றாா்.

இக்கூட்டத்தில் காங்கிரஸ் மாநில எஸ்.சி பிரிவு துணைத் தலைவா் டாக்டா் செல்வராஜ் , கட்சியின் சட்டமன்ற எதிா்க்கட்சித் தலைவா் ராமசாமி, காங்கிரஸ் நகா் தலைவா் எம்.கணேசன் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளா் சஞ்சய்காந்தி, வட்டாரத் தலைவா் கரு.கணேசன், மாவட்ட இணைச் செயலாளா்கள் வழக்குரைஞா் எம்.முத்துக்குமாா், கே.ஜி.ஏ.மகாலிங்கன், பி.புருஷோத்தமன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com