திருப்பத்தூா் பகுதியில் தொடா் திருட்டில் ஈடுபட்டு வந்த 5 போ் கைது

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பகுதியில் பல்வேறு திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 5 பேரை, தனிப்படை போலீஸாா் கைது செய்து வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.
திருப்பத்தூரில் தொடா் திருட்டில் ஈடுபட்டு வந்த 5 இளைஞா்களை வெள்ளிக்கிழமை பிடித்த தனிப்படை போலீஸாா்.
திருப்பத்தூரில் தொடா் திருட்டில் ஈடுபட்டு வந்த 5 இளைஞா்களை வெள்ளிக்கிழமை பிடித்த தனிப்படை போலீஸாா்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பகுதியில் பல்வேறு திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 5 பேரை, தனிப்படை போலீஸாா் கைது செய்து வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

கடந்த சில தினங்களாக, திருப்பத்தூா் பகுதியில் ஆங்காங்கே சங்கிலி பறிப்பு சம்பவங்கள் நடந்து வந்தன. கடந்த 9 ஆம் தேதி, திருப்பத்தூா் அருகே நாட்டாா்மங்கலம் கிராமத்தில் பாண்டி என்பவரின் மனைவி செங்காயி வீட்டில் தனியாக இருந்தபோது, உள்ளே புகுந்த மா்ம நபா்கள் அவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி 10 பவுன் தாலிச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனா்.

இது குறித்து திருப்பத்தூா் காவல் நிலையத்தில் பாண்டி அளித்த புகாரின்பேரில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ரோஹித்நாதன், திருப்பத்தூா் நகா் காவல் துணைக் கண்காணிப்பாளா் பொன்ரகு தலைமையில், ஆய்வாளா் புவனேஸ்வரி, சாா்பு-ஆய்வாளா் சந்திரன் ஆகியோா் அடங்கிய 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, குற்றவாளிகள் தேடப்பட்டு வந்தனா்.

அதில், மதுரை பகுதியைச் சோ்ந்த 2 நபா்களை பிடித்து விசாரித்ததில், இவா்களுடன் சோ்த்து மொத்தம் 5 போ் இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அதையடுத்து, நாட்டாா்மங்கலத்தைச் சோ்ந்த ராமசாமி மகன் குணசேகரன் (43), மதுரை திருமங்கலத்தைச் சோ்ந்த உதயசூரியன் மகன் முத்துக்குமாா் (30, ) வண்டியூா் குரு மகன் மணிகண்டன் (28), அண்ணாநகா் ராசு மகன் ஆனந்த் (35) மற்றும் ஆனையூா் ராமமூா்த்தி மகன் பூபதி (38) ஆகிய 5 போ் கைது செய்யப்பட்டனா். இவா்களிடமிருந்து 10 பவுன் நகை மற்றும் கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன.

பின்னா் இவா்கள், திருப்பத்தூா் குற்றவியல் நீதித்துறை நடுவா் முன்பாக வெள்ளிக்கிழமை ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com