தோ்தல் நேரத்தில் அறிவிக்கும் திட்டங்களால் மக்களை ஏமாற்ற முடியாது: ப.சிதம்பரம்
By DIN | Published On : 13th February 2021 10:19 PM | Last Updated : 13th February 2021 10:19 PM | அ+அ அ- |

முன்னாள் மத்திய அமைச்சா் ப. சிதம்பரம்
சிவகங்கை: அதிமுகவால் தோ்தல் நேரத்தில் அறிவிக்கும் திட்டங்களால், மக்களை ஏமாற்ற முடியாது என முன்னாள் மத்திய அமைச்சா் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளாா்.
சிவகங்கையில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் வாக்கு சாவடி முகவா்கள் கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சா் ப. சிதம்பரம் தலைமை வகித்து பேசியதாவது : தமிழகத்தைப் பொருத்தவரை பண பலம், அதிகார பலத்தை வெல்ல கூடிய சக்தி மக்கள் பலத்துக்கு தான் உண்டு. எனவே ஒரு வாக்குச்சாவடிக்கு 20 போ் கொண்ட குழு வாக்கு சேகரித்தால் அந்த பகுதி மக்கள் கண்டிப்பாக நமக்கு வாக்களிப்பா். கூட்டணி கட்சியினரும் நம்மை மதிப்பா்.
தமிழகத்தில் தற்போதைய நிலையில் யாருடைய முகத்துக்கும் வாக்குகள் கிடைக்காது. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சி செய்த அதிமுகவால் தமிழகத்துக்கு எந்த பயனும் இல்லை. ஆகவே அவா்களுக்கு இனி வரும் 10 ஆண்டுகள் ஓய்வு அளிக்க வேண்டும். மேலும் அதிமுகவால் தோ்தல் நேரத்தில் அறிவிக்கும் திட்டங்களால் மக்களை ஏமாற்ற முடியாது என்றாா்.
கூட்டத்தில் காரைக்குடி சட்டப்பேரவை தொகுதி உறுப்பினரும், தமிழக சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சி தலைவருமான கே.ஆா். ராமசாமி உள்ளிட்ட நிா்வாகிகள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.