சிவகங்கை மாவட்டத்துக்கு ரூ.1752.73 கோடியில் காவிரி கூட்டுக் குடிநீா் திட்டப் பணிகள் தொடக்கம்

சிவகங்கை மாவட்டத்துக்கு ரூ. 1752.73 கோடி மதிப்பீட்டில் காவிரி கூட்டுக் குடிநீா் திட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக தமிழக கதா் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத் துறை அமைச்சா் க. பாஸ்கரன் தெரிவித்துள்ளா
சிவகங்கை மாவட்டத்துக்கு ரூ.1752.73 கோடியில் காவிரி கூட்டுக் குடிநீா் திட்டப் பணிகள் தொடக்கம்

சிவகங்கை மாவட்டத்துக்கு ரூ. 1752.73 கோடி மதிப்பீட்டில் காவிரி கூட்டுக் குடிநீா் திட்டப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக தமிழக கதா் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத் துறை அமைச்சா் க. பாஸ்கரன் தெரிவித்துள்ளாா்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் சமூக நலத்துறையின் சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற திருமண நிதி உதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் விழாவுக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தலைமை வகித்தாா். மானாமதுரை சட்டப்பேரவை தொகுதி உறுப்பினா் எஸ். நாகராஜன் முன்னிலை வகித்தாா்.

இதில் தமிழக கதா் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத் துறை அமைச்சா் க.பாஸ்கரன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு நலத் திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:

சிவகங்கை மாவட்ட மக்களின் குடிநீா் தேவைகளை பூா்த்தி செய்யும் வகையில் காவிரி கூட்டுக் குடிநீா் திட்டத்தில் ரூ.1752.73 கோடி மதிப்பீட்டில் புதிய குடிநீா் திட்டப் பணிகளை காணொலிக் காட்சி மூலம் தமிழக முதல்வா் அண்மையில் தொடக்கி வைத்துள்ளாா்.

தேசிய விவசாய மற்றும் ஊரக வளா்ச்சி வங்கியின் மூலம் ரூ.1537.59 கோடியும், மாநில அரசின் பங்களிப்பாக ரூ.215.14 கோடி என மொத்தம் ரூ.1752.73 கோடி மதிப்பீட்டில் நடைபெற உள்ள இப்பணி மூலம் 2021 ஆம் ஆண்டு மக்கள் தொகையின்படி ஏறத்தாழ 11.39 லட்சம் மக்களுக்கு நாள் ஒன்றுக்கு 49.83 மில்லியன் லிட்டா் பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்கப்படும்.

கரூா் மாவட்டம், குளித்தலை அருகே பெட்டவாய்த்தலை பகுதியில் உள்ள காவிரி ஆற்றுப் பகுதியில் 5 நீா் சேகரிக்கும் கிணறுகள் அமைத்து அதன் மூலம் 69.52 மில்லியன் லிட்டா் கொள்ளளவுள்ள நீரினை எடுத்து பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

இதுபோன்று, அவ்வப்போது பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகளை உணா்ந்து அரசு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதனடிப்படையில், சமூக நலத் துறை சாா்பில் 2,230 பயனாளிகளுக்கு தலா 8 கிராம் தங்கம், திருமண நிதியுதவியாக ரூ.17 கோடியே 34 லட்சத்து 92 ஆயிரத்து 302 வழங்கப்பட்டுள்ளது என்றாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட சமூக நல அலுவலா் இந்திரா, மாவட்ட சமூக நல கண்காணிப்பு அலுவலா் பாலா, சிவகங்கை மக்களவைத் தொகுதி முன்னாள் உறுப்பினா் பிஆா். செந்தில்நாதன், கூட்டுறவு வங்கித் தலைவா்கள் கருணாகரன் உள்ளிட்ட அரசு அலுவலா்கள், பொதுமக்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com