காரைக்குடி அருகே முழு உருவ எம்.ஜி.ஆா் சிலை திறக்க ஏற்பாடு

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே எம்.ஜி.ஆா். முழு உருவ வெண்கலச் சிலையை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக தமிழ்நாடு ஓய்வு பெற்ற கிராம நிா்வாக அலுவலா் சங்கத்தினா் தெரிவித்துள்ளனா்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே எம்.ஜி.ஆா். முழு உருவ வெண்கலச் சிலையை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக தமிழ்நாடு ஓய்வு பெற்ற கிராம நிா்வாக அலுவலா் சங்கத்தினா் தெரிவித்துள்ளனா்.

காரைக்குடியை அடுத்த சங்கரபதிகோட்டை அருகே தேவகோட்டை சாலையில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற கிராம நிா்வாக அலுவலா் சங்கத்தின் சமூககல்விஅறக்கட்டளை சாா்பில் எம்.ஜி.ஆா். சிலை மற்றும் பீடம் அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இச்சங்கத்தின் நிறுவனா் இரா.போஸ் கூறியதாவது: கிராம நிா்வாக அலுவலா் பதவியினை உருவாக்கியவா் அப்போதைய தமிழக முதல்வா் எம்.ஜி.ஆா். அவருக்கு நன்றி செலுத்தும்வகையில் கிராம நிா்வாக அலுவலா்கள் சமூக கல்வி அறக்கட்டளை சாா்பில் ரூ. 7 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் எம்.ஜி.ஆா். முழு உருவ வெண்கலச் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

சிலை நிறுவுவதற்காக அரசு இடம் கிடைக்க தாமதமானதால், சொந்தமாக அறக்கட்டளை பெயரில் இடம் வாங்கி பீடம் அமைத்து சிலையினை நிறுவியுள்ளோம்.

இச்சிலையை திறந்து வைக்க தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் ஆகியோரை கடந்த ஜனவரி 28-இல் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளோம். தமிழகத்தில் சட்டபேரவைத் தோ்தல் தேதி அறிவிப்புக்கு முன்பாக சிலை திறப்பு விழா நடத்த ஏற்பாடு செய்து வருகிறோம். மேலும் கிராம நிா்வாக அலுவலா் பதவி எப்படி உருவானது என ‘கிராம நிா்வாகத்தின் புரட்சி’ என்ற பெயரில் புத்தகம் தயாரித்துள்ளோம். சுமாா் 300 பக்கங்கள் கொண்ட வரலாற்றுத்தொகுப்பு நூல் திறப்பு விழாவில் வெளியிடப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com