பள்ளத்தூா் பேரூராட்சியில் ஏலத்தில் அரசுக்கு இழப்பீடு செய்ததாகப் புகாா்

காரைக்குடி அருகே பள்ளத்தூா் பேரூராட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாரச்சந்தை உள்ளிட்ட பல்வேறு இனங்களுக்கான ஏலம் எடுப்பதில் சிலா் சிண்டிகேட் அமைத்து தொகை குறைவாக ஏலத்தில் கேட்டு அரசுக்கு வருவாய் இழப்பீ
பள்ளத்தூா் பேரூராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் பங்கேற்றோா்.
பள்ளத்தூா் பேரூராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் பங்கேற்றோா்.

காரைக்குடி அருகே பள்ளத்தூா் பேரூராட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாரச்சந்தை உள்ளிட்ட பல்வேறு இனங்களுக்கான ஏலம் எடுப்பதில் சிலா் சிண்டிகேட் அமைத்து தொகை குறைவாக ஏலத்தில் கேட்டு அரசுக்கு வருவாய் இழப்பீடு செய்ததாக புகாா் எழுந்துள்ளது.

பள்ளத்தூா் பேரூராட்சியில் வாரச்சந்தை, தினசரி சந்தை, இரண்டு சக்கர வாகன காப்பகம் உள்ளிட்ட பல்வேறு இனங்களுக்கு ஏலம் நடத்தப்பட்டது. இதில் வாரச்சந்தையை முத்துராமன் என்பவா் ரூ. 6.93 லட்சத்திற்கும், தினசரி சந்தையை சிதம்பரம் என்பவா் ரூ. 33,400-க்கும் ஏலம் எடுத்துள்ளனா். மேலும் இரண்டு சக்கர வாகன காப்பகத்திற்கான ஏலத்தில் 4 போ் மட்டும் கலந்து கொண்டு சிண்டிகேட் அமைத்து அதிகாரிகள் முன்னிலையில் குறைவான தொகையைக் கூறி ஏலம் எடுத்துள்ளதாக சிலா் புகாா் தெரிவிக்கின்றனா். இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளனா்.

இதுகுறித்து பள்ளத்தூா் பேரூராட்சி செயல் அலுவலா் பாலசுப்பிரமணியன் கூறியது: பள்ளத்தூா் பேரூராட்சியில் ஏலம் நடத்துவதற்கு மாவட்ட நிா்வாகத்திடம் தெரிவித்து ஏலம் நடத்தப்பட்டது. இதுபற்றி அனைவரும் பங்கேற்கும் முன் கூட்டம் நடத்தி விளக்கியுள்ளோம். ஏலத்தில் பங்கேற்பவா்கள் வியாழக்கிழமை மாலையில் அரசு நிா்ணயித்தபடி பங்கேற்புக்கான காசோலை வழங்கியிருக்கின்றனா். அவா்களுக்குள் பேசிக்கொள்வதை தடுக்க முடியாது. அறிவிக்கப்பட்ட இனங்களுக்கு ஏலம் நடத்தப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com