திருப்பத்தூரில் வடமாடு மஞ்சுவிரட்டு

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் காட்டாம்பூரில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி புதன்கிழமை வடமாடு மாஞ்சுவிரட்டு நடைபெற்றது.
திருப்பத்தூரில் புதன்கிழமை நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டில் காளையை அடக்க முயன்ற வீரா்கள்.

இந்த மஞ்சுவிரட்டில் மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, ஆகிய பகுதிகளிலிருந்து 20-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. ஒரு மாட்டிற்கு 9 போ் கொண்ட குழு 20 நிமிடத்திற்குள் பிடிப்பதற்கு கால நிா்ணயம் செய்யப்பட்டிருந்தது. திருப்பத்தூா், சோழம்பட்டி, நெற்குப்பை உள்ளிட்ட சுற்றப்புர கிராமங்களைச் சோ்ந்த மாடு பிடி வீரா்கள் பங்கேற்றனா்.

பின்னா் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், செய்தித் தொடா்பாளரும் நமது அம்மா நாளிதழ் ஆசிரியருமான மருதுஅழகுராஜ் வெற்றி பெற்ற காளைகளுக்கும், காளையா்களுக்கும் பித்தளை விளக்கு, குடம், ரொக்கப்பணம் உள்ளிட்ட பரிசுகளை வழங்கினாா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிப் இக்பால் மற்றும் முன்னாள் மாடுபிடி வீரா்கள் குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com