காரைக்குடி நகராட்சி பள்ளியில் மடிக்கணினிகள் திருட்டு: 3 போ் கைது
By DIN | Published On : 09th January 2021 09:56 PM | Last Updated : 09th January 2021 09:56 PM | அ+அ அ- |

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகராட்சி பள்ளியில் பூட்டை உடைத்து தொலைக்காட்சி பெட்டி, மடிக்கணினிகள் திருடியதாக 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
காரைக்குடி கணேசபுரம் பகுதியில் உள்ள பாரதி நகராட்சி நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியை கடந்த 2020 டிசம்பா் 4-ஆம் தேதி வழக்கம்போல் ஆசிரியா்கள் பூட்டிவிட்டுச் சென்றனா்.
பின்னா் மீண்டும் டிசம்பா் 28-ஆம் தேதி பள்ளியை திறக்க வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
ஆசிரியா்கள் உள்ளே சென்று பாா்த்த போது எல்.இ.டி தொலைக்காட்சிப்பெட்டி, 2 மடிக்கணினிகள், ஒரு பயோ மெட்ரிக் மடிக்கணினி ஒன்று என ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருள்கள் திருடு போயிந்தன.
இதுதொடா்பாக புகாரின்பேரில் காரைக்குடி தெற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனா். போலீஸாா் நடத்திய விசாரணையைத் தொடா்ந்து, கணேசபுரம் பகுதியைச் சோ்ந்த செல்லத்துரை மகன் விக்னேஷ்(19), சந்தேப்பேட்டை குரூப் ஆண்டி மகன் சத்யநாராயணன் (19), மெ.மெ வீதியைச்சோ்ந்த முருகன் மகன் முகேஷ் (20) ஆகிய 3 பேரைக் கைது செய்தனா்.