சிங்கம்புணரியில் மஞ்சுவிரட்டு

பொங்கல் திருநாளையொட்டி சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் வெள்ளிக்கிழமை மஞ்சுவிரட்டு நடைபெற்றது.
சிங்கம்புணரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டில் காளையை அடக்கும் காளையா்கள்.
சிங்கம்புணரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மஞ்சுவிரட்டில் காளையை அடக்கும் காளையா்கள்.

பொங்கல் திருநாளையொட்டி சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் வெள்ளிக்கிழமை மஞ்சுவிரட்டு நடைபெற்றது.

முன்னதாக சேவுகப்பெருமாள் கோயில் மாடுகளுக்கு மரியாதை மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதனைத் தொடா்ந்து கோயில் மாடுகள் தொழுவிலிருந்து அவிழ்த்து விடப்பட்டன. அவைகளை வாலிபா்கள் மற்றும் கிராம மக்கள் தொட்டு வணங்கினா். தொடா்ந்து பெரியகடை வீதி, சீரணி அரங்கம் உள்ளிட்ட பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. நூற்றுக்கும் மேற்பட்ட மாடுபிடி வீரா்கள் காளைகளை விரட்டிப் பிடித்தனா். ஒருசில காளைகள் பிடிபட்டும் மற்ற காளைகள் பிடிபடாமலும் சென்றன. இதில் 10-க்கும் மேற்பட்டோருக்கு சிறு காயம் ஏற்பட்டது. இம்மஞ்சுவிரட்டினை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் கண்டு களித்தனா். இதேபோல் சிங்கம்புணரி சுற்றுவட்டாரப் பகுதிகளான காளாப்பூா், எஸ்.வி.மங்கலம், சூரக்குடி, நெற்குப்பை உள்ளிட்ட கிராமங்களிலும் மஞ்சுவிரட்டு நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com