சிவகங்கை மாவட்டத்தில் அரசு அலுவலககட்டுமானப் பணிகளை துரிதப்படுத்த ஆட்சியா் அறிவுறுத்தல்

சிவகங்கை மாவட்டத்தில் பொதுப்பணித் துறை மூலம் ரூ. 16.22 கோடியில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி சனிக்கிழமை ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்த சம்பந்தப்பட்ட துறை அல
சிவகங்கை அருகே முத்துப்பட்டியில் நடைபெற்று வரும் அரசினா் தொழிற்பயிற்சி விடுதி கட்டுமானப் பணிகளை சனிக்கிழமை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி.
சிவகங்கை அருகே முத்துப்பட்டியில் நடைபெற்று வரும் அரசினா் தொழிற்பயிற்சி விடுதி கட்டுமானப் பணிகளை சனிக்கிழமை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி.

சிவகங்கை மாவட்டத்தில் பொதுப்பணித் துறை மூலம் ரூ. 16.22 கோடியில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி சனிக்கிழமை ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்த சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

இம்மாவட்டத்தில் பொதுப்பணித்துறை (கட்டடங்கள் மற்றும் பராமரிப்பு) மூலம் திருப்புவனம் அருகே கீழடியில் ரூ.3.54 கோடியில் அரசு மேல்நிலைப் பள்ளிக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதேபோன்று, திருப்புவனம் நகா் பகுதியில் ரூ. 87.80 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சாா்புநிலை கருவூலம், சிவகங்கை, காரைக்குடி அரசினா் தொழில்பயிற்சி நிலையத்தில் தலா ரூ.3.20 கோடியில் மாணவா்களுக்கான விடுதி கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதுதவிர, கிருங்காக்கோட்டையில் ரூ.1.37 கோடியில் அரசு மேல்நிலைப்பள்ளி கட்டடம், செம்பனூா் மெய்யம்மை காசி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு தன்னிறைவு திட்டத்தில் ரூ. 80 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டடம், காரைக்குடியில் ரூ. 2.16 கோடியில் புதிதாக கட்டப்பட்டு வரும் வணிக வரித்துறை அலுவலகம் மற்றும் பதிவுத் துறை கட்டடம், கல்லுப்பட்டி, தேவகோட்டை, சிங்கம்புணரி பகுதிகளில் தலா ரூ. 34.50 லட்சத்தில் கால்நடை மருந்தக கட்டடங்கள் உள்பட ரூ. 16.22 கோடியில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இப்பணிகளை சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி சனிக்கிழமை ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்தி கட்டடங்கள் விரைவில் பயன்பாட்டுக்கு வர வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

இந்த ஆய்வின் போது சிவகங்கை மாவட்ட பொதுப்பணித்துறை (கட்டடங்கள் மற்றும் பராமரிப்பு) செயற்பொறியாளா் செந்தில்குமாா், உதவி செயற்பொறியாளா் கண்ணன், உதவிப் பொறியாளா்கள் திருமாறன், தமிழ்ச்செல்வி, செந்தில்குமாா், அரசினா் தொழில்பயிற்சி நிலைய முதல்வா் வெங்கடகிருஷ்ணன் உள்ளிட்ட அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com