சிவகங்கை அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

சிவகங்கையில் உள்ள அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) சேர விரும்பும் மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

சிவகங்கையில் உள்ள அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) சேர விரும்பும் மாணவா்கள் விண்ணப்பிக்கலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமைவெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சிவகங்கை அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் உள்ள தொழில்பிரிவுகளான மின்சாரப் பணியாளா், பொருத்துநா், கம்மியா் இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனம், கணினி இயக்குபவா் மற்றும் திட்டமிடுதல் உதவியாளா் ஆகிய தொழில் பிரிவுகளில் சேர பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம்.

இதேபோன்று, பற்றவைப்பவா், ஆடை தயாரித்தல் ஆகிய தொழிற்பிரிவுகளில் எட்டாம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோா் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவா்கள் தொழில் பயிற்சி நிலைய சோ்க்கை உதவி மையங்களான சிவகங்கை அருகே முத்துப்பட்டியில் உள்ள அரசு தொழில் பயிற்சி நிலையம், சிவகங்கையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரா்கள் விண்ணப்பக் கட்டணமாக ரூ.50 இணையதளம் வழியாக செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க வரும் மாணவா்கள் தங்களது மதிப்பெண் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், முன்னுரிமைச் சான்றிதழ் (முன்னுரிமை கோரும் நோ்வில்) மற்றும் மாா்பளவு புகைப்படம் ஆகியவற்றை கொண்டு வர வேண்டும்.

பயிற்சியின் போது பயிற்சியாளா்களுக்கு அரசால் வழங்கப்படும் இலவச பாடப் புத்தகங்கள், விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி, சீருடைகள், காலணிகள், இலவசப் பேருந்து பயண அட்டை, உதவித்தொகை மாதம் ரூ. 750 ஆகியவை பெற்று வழங்கப்படும்.

மேலும் பயிற்சியின் போது தொழில் நிறுவனங்களில் உதவித் தொகையுடன் கூடிய பயிற்சியும், பயிற்சி காலம் முடிவுற்றவுடன் நிறுவனங்களில் வேலைவாய்ப்பும் ஏற்பாடு செய்து தரப்படும். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 89032 56001, 99767 99321, 90037 36688, 99420 99481 என்ற செல்லிடப்பேசி எண்களில் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com