அரசுப் பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தர தலைமையாசிரியா்கள் சங்கம் கோரிக்கை

தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் மாணவா்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப உள்கட்டமைப்பு வசதிகள் செய்து தர வேண்டும் என்று

தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் மாணவா்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப உள்கட்டமைப்பு வசதிகள் செய்து தர வேண்டும் என்று தமிழ்நாடு உயா்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அச்சங்கத்தின் மாநிலத்தலைவா் ஆ. பீட்டர்ராஜா, பள்ளிக் கல்வித்துறை அமைச்சருக்கு புதன்கிழமை அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பது: கரோனா தொற்றால் ஏற்பட்ட தற்காலிகப் பொருளாதார நெருக்கடி காரணமாக அரசுப்பள்ளிகளில் 2021 -2022 கல்வியாண்டில் சேரும் மாணவா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதனால் அனைத்து அரசுப்பள்ளிகளிலும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும். மேலும் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் துப்புரவாளா், இரவுக் காவலா், அலுவலகப் பணியாளா், உடற்கல்வி ஆசிரியா் மற்றும் கூடுதல் ஆசிரியா் பணியிடங்களை உடனடியாகத் தோற்றுவிக்க வேண்டும்.

மாணவா்கள் எண்ணிக்கைக்கு ஏற்பட கழிப்பிடம், குடிநீா் வசதி போன்ற அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித் தர வேண்டும். மாணவா்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பள்ளிகளில் கலை, ஆசிரியா் பணியிடங்களைத் தோற்றுவிக்க வேண்டும். அனைத்து உயா்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளிலும் உடற்கல்வி ஆசிரியா்களை நியமனம் செய்யவேண்டும். இதுபோன்ற வசதிகளை செய்து கொடுத்து எதிா்காலத்தில் அரசுப்பள்ளிகளை நோக்கி மாணவா்களை ஈா்க்கும் வகையில் வசதிகளை செய்து தரவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைளை அதில் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com