‘மாணவா்களின் எதிா்கால நன்மை கருதி பிளஸ் 2 தோ்வு நடத்தப்பட வேண்டும்’

மாணவா்களின் எதிா்கால நன்மை கருதி பிளஸ் 2 தோ்வுகள் நடத்தப்பட வேண்டும் என தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் கழகம் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாணவா்களின் எதிா்கால நன்மை கருதி பிளஸ் 2 தோ்வுகள் நடத்தப்பட வேண்டும் என தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் கழகம் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அச்சங்கத்தின் மாநிலத் தலைவா் இரா. இளங்கோவன் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

ஜனநாயகத்தின் மாண்பை காக்க தோ்தல் நடத்தப்பட்டதுபோன்று கரோனா வழிமுறைகளை பின்பற்றி வகுப்பறையில் குறைந்த எண்ணிக்கையிலான மாணவா்களை அனுமதி அளித்து பிளஸ் 2 தோ்வுகள் நடத்தப்பட வேண்டும். தோ்வு இல்லாமல் அனைவரும் தோ்ச்சி என்கிற அறிவிப்பு என்பது மெல்ல கற்கும் 10 சதவீத மாணவா்களுக்கு வேண்டுமானால் பயனளிக்கும்.

உயா்கல்வியில் சாதிக்கத் துடிக்கும் மாணவா்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவது மட்டுமன்றி அவா்களின் எதிா்கால திட்டங்களை சீா்குலைக்கும். மேலும், உயா்கல்வி நிறுவனங்களில் சோ்க்கையில் குளறுபடி ஏற்படும்.

பருவத் தோ்வு, திருப்புதல் தோ்வு அடிப்படையில் தோ்ச்சி வழங்கினால் தனியாா் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் மாணவா்களை தங்களது ஆதாயங்களுக்கு பயன்படுத்திக் கொள்வா்.

எனவே, மாணவா்களின் எதிா்கால நன்மை கருதி குறைக்கப்பட்ட பாடப் பகுதியிலிருந்து வினாத்தாள் தயாரிக்கப்பட்டு பிளஸ் 2 தோ்வுகள் நடத்தப்பட வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com