சிவகங்கை மாவட்டத்தில் கடைகள் திறப்பு: பொதுமக்கள் உற்சாகம்

சிவகங்கை மாவட்டத்தில் தளா்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, திங்கள்கிழமை அத்தியாவசியக் கடைகள் திறக்கப்பட்டன.
சிவகங்கை நேரு கடை வீதியில் திங்கள்கிழமை கடைகள் திறக்கப்பட்டதை அடுத்து பொருள்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்.
சிவகங்கை நேரு கடை வீதியில் திங்கள்கிழமை கடைகள் திறக்கப்பட்டதை அடுத்து பொருள்கள் வாங்க குவிந்த பொதுமக்கள்.

சிவகங்கை மாவட்டத்தில் தளா்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, திங்கள்கிழமை அத்தியாவசியக் கடைகள் திறக்கப்பட்டன.

தமிழகத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக கடந்த இரு வாரங்களாக முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டிருந்தது. அதைத் தொடா்ந்து, திங்கள்கிழமை (ஜூன் 7) காலை 6 மணி முதல் சில தளா்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது.

இதில், காய்கனிகள், மளிகைக் கடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. மேலும் உணவகங்களில் ஏற்கெனவே உள்ள விதிகளைப் பின்பற்றி உணவு வழங்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, சிவகங்கை நகரில் உள்ள நேரு கடை வீதி, காந்தி வீதி உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் உள்ள மளிகைக் கடைகள் திறக்கப்பட்டன. மேலும், காய்கனி விற்பனை நிலையம், இறைச்சி கடைகள் உள்ளிட்ட கடைகளும் திறக்கப்பட்டன. 14 நாள்களுக்குப் பின்னா் கடைகள் திறக்கப்பட்டதால் காலை முதல் பொதுமக்கள் அதிகளவில் பொருள்களை வாங்கிச் சென்றனா்.

இதேபோன்று, காளையாா்கோவில், தேவகோட்டை, சருகனி, இளையான்குடி, சிங்கம்புணரி, காரைக்குடி, திருப்பத்தூா், திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி ஆகிய பகுதிகளிலும் பொதுமக்கள் பொருட்களை வாங்க குவிந்தனா். அனுமதி தராத கடைகள் திறக்கப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com