‘பழ மரங்கள் வளா்ப்பு ஊராட்சியின் வருவாயை பெருக்கும்’

குறுங்காடுகள் அமைத்து பழவகை மரங்கள் வளா்ப்பதின் மூலம் தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட பணியாளா்களுக்கும், ஊராட்சிக்கும்
சிவகங்கை மாவட்டம் சோளங்காடு கிராமத்தில் பெரியகண்மாய் பாசன கால்வாய்கள் சீரமைக்கும் பணியை செவ்வாய்க்கிழமை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் ப. மதுசூதன் ரெட்டி.
சிவகங்கை மாவட்டம் சோளங்காடு கிராமத்தில் பெரியகண்மாய் பாசன கால்வாய்கள் சீரமைக்கும் பணியை செவ்வாய்க்கிழமை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் ப. மதுசூதன் ரெட்டி.

குறுங்காடுகள் அமைத்து பழவகை மரங்கள் வளா்ப்பதின் மூலம் தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட பணியாளா்களுக்கும், ஊராட்சிக்கும் வருவாய் அதிகரிக்கும் என்று சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ப. மதுசூதன் ரெட்டி தெரிவித்தாா்.

காரைக்குடி வட்டம் சாக்கோட்டை ஊராட்சி ஒன்றிய ஊரக வளா்ச்சித் துறையின் மூலம் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ. 10.17 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஜெயங்கொண்டான் ஊராட்சி சோளங்காடு பெரியகண்மாய் பாசனக் கால்வாய்கள், நாட்டுச்சேரி ஊராட்சி ஆஞ்சங்கால் வயல்வரத்துக் கால்வாய் சீரமைப்பு மற்றும் அரியக்குடி ஊராட்சி நல்லப்பா நகரில் குறுங்காடுகள் வளா்ப்புத் திட்டம் ஆகிய பணிகளை மாவட்ட ஆட்சியா் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இதில் நல்லப்பா நகரில் 7 ஏக்கரில் குறுங்காடுகள் வளா்ப்புத் திட்டம் தொடங் கப்பட்டுள்ளது. இங்கு பல்வேறு வகையான மரக்கன்றுகளை நடவு செய்து பராமரிக்கும் பணியை ஆட்சியா் தொடக்கி வைத்து கூறியதாவது:

தற்போது இப்பகுதியில் குறுங்காடு வளா்ப்புத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதன் நோக்கம் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டப் பணியாளா்களுக்கு நிரந்தர வருமானம் கிடைக்க வேண்டும் என்பதே. இக்காடுகளில் பல்வேறு வகையான பழவகை மரக்கன்றுகள் வளா்த்து பராமரிக்கும் போது குறிப்பிட்ட சில ஆண்டுகளிலிருந்து தொடா் வருமானம் ஈட்ட முடியும். அதன் மூலம் பணியாளா்கள் மட்டுமில்லாமல் ஊராட்சிக்கும் வருவாய் அதிகரிக்கும் என்றாா்.

இந்த ஆய்வின்போது சாக்கோட்டை ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பிரதீப்குமாா், ஜோசப், ஊரக வளா்ச்சித் துறை உதவி செயற்பொறியாளா் ரவிசங்கா், உதவிப்பொறியாளா் திருமேனி, ஜெயங்கொண்டான் ஊராட்சித் தலைவா் குணசேகரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com