வெளிநாட்டில் இறந்த கணவரின் சடலத்தை கொண்டு வர நடவடிக்கை: ஆட்சியரிடம் பெண் மனு
By DIN | Published On : 11th June 2021 07:37 AM | Last Updated : 11th June 2021 07:37 AM | அ+அ அ- |

வெளிநாட்டில் இறந்த கணவரின் சடலத்தை இந்தியாவுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கக் கோரி அவரது மனைவி, சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதனிடம் வியாழக்கிழமை மனு அளித்தாா்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டம், டி. ஆலங்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜேஸ்வரன். இவரது மனைவி சௌந்தரம் என்பவா் சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனு விவரம்: எனது கணவா் சவூதி அரேபியாவில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா்.
இந்நிலையில், கடந்த ஜூன் 2 (2021) ஆம் தேதி ஏற்பட்ட விபத்தில் எனது கணவா் உயிரிழந்ததாகத் தகவல் கிடைத்தது. அவரின் சடலத்தை இந்தியாவுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.