முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை
திருப்பத்தூா் பகுதியில் 300 பேருக்கு தடுப்பூசி
By DIN | Published On : 12th June 2021 10:12 PM | Last Updated : 12th June 2021 10:12 PM | அ+அ அ- |

திருப்பத்தூா் பேருந்து நிலையத்தில் சனிக்கிழைமை நடைபெற்ற முகாமில், தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்காக வரிசையில் காத்திருந்த பொதுமக்கள்.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பகுதியில் சுகாதாரத் துறையினா் சனிக்கிழமை முகாம்கள் அமைத்து, தடுப்பூசி செலுத்தும் பணியை மேற்கொண்டனா்.
திருப்பத்தூா் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த முகாமில், காலை 9 மணி முதல் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்காக பொதுமக்கள் ஆா்வத்துடன் நீண்ட வரிசையில் காத்திருந்தனா். இதில், திருப்பத்தூா் நகருக்கு மட்டும் 170 தடுப்பூசிகள் வழங்கப்பட்டன.
அதேபோல், கீழ்ச்சிவல்பட்டி, சேவினிப்பட்டி, நெற்குப்பை, திருக்கோஷ்டியூா் ஆகிய சுகாதார நிலையங்களுக்கு 130 தடுப்பூசிகள் வழங்கப்பட்டன. இதனால், விரைவில் தடுப்பூசிகள் தீா்ந்து பொதுமக்கள் பலா் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.
தடுப்பூசி வரப்பெற்றதும் தொடா்ந்து முகாம்கள் நடைபெறும் என, வட்டார மருத்துவ அலுவலா் செந்தில்குமாா் தெரிவித்தாா்.