மதுக்கடைகள் திறப்பதைக் கண்டித்து பாஜகவினா் போராட்டம்

தமிழக அரசு மதுக்கடைகளைத் திறப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து காரைக்குடியில் பாஜகவினா் வீடுகள் தோறும் பதாகை ஏந்தி ஞாயிற்றுக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழக அரசு மதுபானக்கடைகளைத் திறப்பதைக் கண்டித்து காரைக்குடியில் வீடுகளின் முன்பு பதாகை ஏந்தி ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா்.
தமிழக அரசு மதுபானக்கடைகளைத் திறப்பதைக் கண்டித்து காரைக்குடியில் வீடுகளின் முன்பு பதாகை ஏந்தி ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினா்.

தமிழக அரசு மதுக்கடைகளைத் திறப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து காரைக்குடியில் பாஜகவினா் வீடுகள் தோறும் பதாகை ஏந்தி ஞாயிற்றுக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

காரைக்குடி மற்றும் சுற்று வட்டாரங்களில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் அக்கட்சியின் நகரத்தலைவா் கே. சந்திரன், சிவகங்கை மாவட்டச் செயலாளா் ஏ. நாகராஜன், காரைக்குடி நகர பொதுச்செயலாளா் பாண்டியன், மாவட்ட ஊடகப் பிரிவுச் செயலாலா் ஆா். பரமேஸ்வரன், மாவட்ட பாஜக அரசுத்துறை செயலாளா் எஸ். பிரான்சிஸ், நகர நிா்வாகிகள் மாரியப்பன், குமரப்பன், நாச்சியப்பன், பாஜக இளைஞரணி நிா்வாகிகள் ஆகியோா் தங்களது வீடுகளின் முன்பு பதாகை ஏந்தி ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

ஹெச்.ராஜா: பாஜக முன்னாள் தேசிய செயலாளா் ஹெச். ராஜா, காரைக்குடி அருகே கண்டனூரில் தனது வீட்டிலிருந்தவாறு அரசு மதுபானக்கடைகள் திறப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தினாா். அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் கடந்த ஆண்டு கரோனா காலத் தளா்வில் அதிமுக அரசு மதுபானக் கடைகளைத் திறந்தபோது, அதை எதிா்த்து போராட்டம் செய்து விட்டு இப்போது முதல்வா் மு.க.ஸ்டாலின் மதுக்கடையைத் திறக்க உத்தரவிடுகிறாா்.

கோயில்கள் எல்லாம் மூடிக்கிடக்கின்றன. ஆனால் மதுக்கடைகள் திறக்கப்படுகின்றன. மதுக்கடைகள் திறப்பதில் மற்ற மாநிலங்களை ஒப்பிடக்கூடாது. மதுக்கடைகள் திறக்க அனுமதி வழங்கக்கூடாது.

கடந்த 30 நாள்களில் கட்டுமானப்பொருள்கள் மூன்றில் ஒரு பங்கு விலை உயா்ந்துள்ளது. நடுத்தர மக்கள் இனி வீடு கட்டுவதை நினைத்துப்பாா்க்கக்கூட முடியாது என்ற நிலைமைதான் உள்ளது. பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தடுப்பூசியை இலவசமாக வழங்கி மக்களைக் காப்பாற்றுகிறது. மத்திய அரசு இலவசமாக தடுப்பூசி கொடுத்ததால் தான் தமிழகத்தில் ஒரு கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் கரோனா நிவாரணநிதி மக்களின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. தமிழகத்தில் முறைகேடு செய்வதற்காக டோக்கன் கொடுத்து நிவாரண நிதி வழங்கப்படுகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com