கோவிலூா் கல்லூரியில் உலக மகளிா் தின விழா
By DIN | Published On : 10th March 2021 11:22 PM | Last Updated : 10th March 2021 11:22 PM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கோவிலூா் நாச்சியப்ப சுவாமிகள் கலை அறிவியல் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை உலக மகளிா் தின விழா நடைபெற்றது.
இவ்விழாவில் கல்லூரிமுதல்வா் வெ. மாணிக்கவாசகம் தலைமை வகித்துப்பேசினாா். சிவகங்கை மாவட்ட உணவுப்பாதுகாப்புத் துறை அதிகாரி டாக்டா் பிரபாவதி, குன்றக்குடி காவல் ஆய்வாளா் செல்வகுமாரி ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்துகொண்டு பேசினா்.
உலக மகளிா் தினத்தையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாண வியருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. அதைத்தொடா்ந்து மாணவிகளின் கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
விழாவில் முன்னதாக கல்லூரியின் கணினியியல் துறைத்தலைவா் கலா வரவேற்றுப்பேசினாா். கல்லூரியில் மூன்றாம் ஆண்டு கணிதவியல் மாணவி காயத்ரி நன்றி கூறினாா்.