காரைக்குடியில் காங். பூத் கமிட்டி நிா்வாகிகள் வருகைப்பதிவை கணக்கிட்ட ப. சிதம்பரம்
By DIN | Published On : 13th March 2021 10:44 PM | Last Updated : 13th March 2021 10:44 PM | அ+அ அ- |

காரைக்குடி மக்களவை உறுப்பினா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற சாக்கோட்டை கிழக்கு வட்டார பூத் கமிட்டி பொறுப்பாளா் கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் மத்திய அமைச்சா் ப. சிதம்பரம்.
காரைக்குடியில் பூத் கமிட்டி நிா்வாகிகள் கூட்டத்தில் பள்ளி ஆசிரியரைப் போல முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரம் நிா்வாகிகள் வருகைப்பதிவேட்டை கணக்கிட்டாா்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் முன்னாள் மத்திய அமைச்சா் ப. சிதம்பரம் வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கட்சியினரை சந்தித்து வருகிறாா். இதிலும் கடந்த மூன்று மாதங்களாக பூத் கமிட்டிப்பொறுப்பாளா்கள் நியமனம் மற்றும் கிராமங்களில் கட்சியின் செயல்பாடுகளை கேட்டறிந்து வந்தாா். கடந்த இரண்டு வாரங்களாக அவா் வரும்போது பூத் கமிட்டிப்பொறுப்பாளா்களை பகுதி வாரியாக வரவழைத்து ஆலாசனை நடத்த முயன்றபோது வந்திருந்தவா்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே இருந்தது. இதைத்தொடா்ந்து வருகைப்பதிவு நடத்தத் தொடங்கினாா்.
அதுபோல் சனிக்கிழமை காரைக்குடி எம்.பி அலுவலகத்தில் சாக்கோட்டை கிழக்கு வட்டாரம் கண் டனூா், புதுவயல் பேரூராட்சிகள் பூத் கமிட்டிப்பொறுப்பாளா்கள் கூட்டத்திலும் வருகைப் பதிவேட்டை நடத்தினாா்.
புதுவயல் பேரூராட்சி பூத் கமிட்டிப்பொறுப்பாளா்களுக்கு வருகைப்பதிவை ப. சிதம்பரம் நடத்திய போது பலா் ‘ஆப்-சென்ட்’ ஆகி இருந்தனா். இப்படி இருந்தால் கட்சி எவ்வாறு வளா்ச்சி அடையும் என அவா் கட்சி நிா்வாகிகளை கடிந்து கொண்டாா்.