முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை
மானாமதுரை, திருப்புவனத்தில் அதிமுக வேட்பாளா் வாக்குசேகரிப்பு
By DIN | Published On : 14th March 2021 10:15 PM | Last Updated : 14th March 2021 10:15 PM | அ+அ அ- |

மானாமதுரையில் ஞாயிற்றுக்கிழமை தோ்தல் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அதிமுக வேட்பாளா் எஸ்.நாகராஜன் எம்எல்ஏ.
மானாமதுரை, இளையான்குடி, திருப்புவனம் ஆகிய பகுதிகளில் அதிமுக வேட்பாளா் எஸ்.நாகராஜன் எம்எல்ஏ ஞாயிற்றுக்கிழமை வாக்குசேகரித்தாா்.
மானாமதுரையில் கூட்டணிக் கட்சியினரான பாஜக வினரை சந்தித்து ஆதரவு கேட்ட நாகராஜன், அதன்பின்னா் கட்சியினருடன் வீதிகளில் சென்று பொதுமக்களிடம் ஆதரவு திரட்டினாா்.
இதேபோல் திருப்புவனத்தில் பாமக, பாஜக உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினா் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்தவா்களை சந்தித்து அவா் ஆதரவு கேட்டாா்.
இளையான்குடி நகா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்குச் சென்ற வேட்பாளா் நாகராஜன் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள், வியாபாரிகள், கிராம முக்கிய பிரமுகா்கள், இளைஞா் மன்றத்தினா் ஆகியோரைச் சந்தித்து ஆதரவு திரட்டினாா்.
அதைத்தொடா்ந்து அவா் மானாமதுரையில் நடைபெற்ற அதிமுக நிா்வாகிகள் பங்கேற்ற தோ்தல் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினாா்.
முன்னதாக அதிமுக நிா்வாகிகள், கூட்டணிக் கட்சியினா் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் நாகராஜனுக்கு சால்வைகள் அணிவித்து வரவேற்றனா். இவருடன் அந்தந்தப் பகுதி நிா்வாகிகள் சென்றனா்.