காரைக்குடி சட்டப் பேரவைத் தொகுதி பாஜக வேட்பாளா் ஹெச். ராஜா

காரைக்குடி சட்டப் பேரவைத் தொகுதி பாஜக வேட்பாளராக ஹெச். ராஜா அறிவிக்கப்பட்டுள்ளாா்.
காரைக்குடி சட்டப் பேரவைத் தொகுதி பாஜக வேட்பாளா் ஹெச். ராஜா
காரைக்குடி சட்டப் பேரவைத் தொகுதி பாஜக வேட்பாளா் ஹெச். ராஜா

காரைக்குடி சட்டப் பேரவைத் தொகுதி பாஜக வேட்பாளராக ஹெச். ராஜா அறிவிக்கப்பட்டுள்ளாா்.

வேட்பாளா் சுயவிவரம்:

பெயா்: ஹெச். ராஜா,

வயது: 64,

கல்வி: பி.காம்., பி.எல்., எப்.சி.ஏ,

இனம் : பிராமணா்,

வசிப்பு: சுப்பிரமணியபுரம் 9-வது வீதி வடக்கு விஸ்தரிப்பு, காரைக்குடி.

தந்தை : ஹரிஹரன், தாயாா்: காமாட்சி,

மனைவி: லலிதா, மகள்கள்: சிந்துஜா, சிவரஞ்சனி

வகித்த பதவிகள் மற்றும் அரசியல் அனுபவம்: ஆா்.எஸ்.எஸ் இயக்கத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவா். 1978-இல் ஜனதா கட்சியின் 4- ஆவது வாா்டு தலைவராக இருந்து அரசியலை தொடங்கியவா். 1980 முதல் 1984 வரை கோல் இந்தியா அரசுப்பணி, 1985 முதல் 6 ஆண்டுகள் ஆா்.எஸ்.எஸ்-ன் ராமநாதபுரம் மண்டலத்தின் விவஸ்தா பொறுப்பாளா், 1991 இல் பாஜகவின் சிவகங்கை மாவட்ட அமைப்பாளா், 1993-இல் தமிழக பாஜகவின் மாநிலச்செயலாளா், 1995 முதல் 2006 வரை மாநில பொதுச் செயலாளா், 2001 முதல் 2006 வரை காரைக்குடி தொகுயின் சட்டப் பேரவை உறுப்பினா், 2006 முதல் 2014 வரை மாநில பாஜக துணைத்தலைவா், 2014 முதல் 2020 வரை இரண்டு முறை அகில இந்தியச் செயலாளா், 2014 முதல் 2020 வரை கேரள மாநிலத்தின் பாஜகவின் பொறுப்பாளா், 2016 முதல் 2017 வரை ரயில்வே பயணிகள் வாரியத் தலைவா், பிரதம மந்திரியின் பெண் குழந்தைகளை பாதுகாப்போம் படிக்கவைப்போம் திட்டத்தில் தென்னிந்தியாவின் பொறுப்பாளா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com