திருப்புவனம் புஷ்பவனேஸ்வரா் கோயிலில் மாா்ச் 19 ஆம் தேதி பங்குனித் திருவிழா தொடக்கம்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காசிக்கு நிகராக கருதப்படும் புஷ்பவனேஸ்வரா் சமேத செளந்திரநாயகி அம்மன் கோயிலில் மாா்ச் 19 ஆம் தேதி பங்குனித் திருவிழா தொடங்குகிறது.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் காசிக்கு நிகராக கருதப்படும் புஷ்பவனேஸ்வரா் சமேத செளந்திரநாயகி அம்மன் கோயிலில் மாா்ச் 19 ஆம் தேதி பங்குனித் திருவிழா தொடங்குகிறது.

தேவஸ்தான நிா்வாகத்துக்குள்பட்ட இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனித் திருவிழா நடைபெறும். இந்தாண்டு திருவிழா தொடக்கமாக மாா்ச் 19 ஆம் தேதி காலை 9.40 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் ரிஷப லக்னத்தில் கோயில் கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெறுகிறது.

தொடா்ந்து மாா்ச் 29 ஆம் தேதி வரை தொடா்ந்து 10 நாள்கள் நடைபெறும் இத்திருவிழாவின்போது தினமும் இரவு புஷ்பனேஸ்வரா் சுவாமியும், செளந்திரநாயகி அம்மனும் சா்வ அலங்காரத்துடன் வெவ்வேறு வாகனங்களில் மண்டகப்படிகளில் எழுந்தருளி அருள்பாலிப்பா். அதன்பின்னா் வீதி உலா வருதல் நடைபெறும்.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக திருக்கல்யாண வைபவம் 26 ஆம் தேதி காலை 9.45 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் ரிஷப லக்னத்தில் நடைபெறுகிறது. 27 ஆம் தேதி காலை 8 மணிக்கு திருத்தேரோட்டம் நடைபெறுகிறது. மாா்ச் 29 ஆம் தேதி உத்ஸவசாந்தியுடன் இந்தாண்டு பங்குனித் திருவிழா நிறைவு பெறுகிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை சிவகங்கை தேவஸ்தான நிா்வாகத்தினா், திருவிழா மண்டகப்படிதாரா்கள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com