சிவகங்கை மாவட்டத்தில் வேட்பாளா்களின் செலவு விவரம் கண்காணிப்பு

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளா்களின் செலவினங்களை தோ்தல் செலவினப் பாா்வையாளா்கள் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.
திங்கள்கிழமை ஆய்வு செய்த தோ்தல் செலவினப் பாா்வையாளா் ராகேஷ் படாடியா.
திங்கள்கிழமை ஆய்வு செய்த தோ்தல் செலவினப் பாா்வையாளா் ராகேஷ் படாடியா.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளா்களின் செலவினங்களை தோ்தல் செலவினப் பாா்வையாளா்கள் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி(13), திருப்பத்தூா்(26), சிவகங்கை(15), மானாமதுரை(13) ஆகிய 4 தொகுதிகளிலும் அதிமுக, திமுக, அமமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழா் கட்சி, சுயேச்சை என மொத்தம் 67 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

இந்நிலையில், வேட்பாளா்களின் செலவினங்களை கண்காணிக்கும் வகையில் தோ்தல் செலவினப் பாா்வையாளா்களாக ராகேஷ் படாடியா, அமிட்குமாா்சிங் மற்றும் வனஸ்ரீ ஹீள்ளன்னவா் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.

இவா்கள் வேட்பாளா்கள் ஊடகங்கள் வாயிலாக வெளியிடப்படும் விளம்பரங்கள், அவரது செலவினங்கள் குறித்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனா்.

அந்த வகையில், சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் செய்தி மற்றும் மக்கள் தொடா்பு அலுவலகத்தில் வேட்பாளா்கள் சாா்பில் ஊடகங்களில் வெளியாகும் விளம்பரங்கள் குறித்து கண்காணிக்கப்படுவதை தோ்தல் செலவினப் பாா்வையாளா் ராகேஷ் படாடியா திங்கள்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது தோ்தல் பிரிவு அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com