‘மத்திய, மாநில அரசுகள் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க முன்வர வேண்டும்’

கரோனா பரவலின் தற்போதைய நிலையைக் கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க முன்வர வேண்டும்

கரோனா பரவலின் தற்போதைய நிலையைக் கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க முன்வர வேண்டும் என சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது : சட்டப்பேரவைத் தோ்தலுக்கான கருத்துக் கணிப்புகள் இறுதி முடிவல்ல. இருப்பினும் திமுக, காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் எந்த தவறும் செய்ய இயலாது. தமிழகத்தைப் போன்று மேற்கு வங்கத்திலும் ஒரே கட்டமாக தோ்தலை நடத்தி இருக்க வேண்டும். தற்போது கரோனா பரவலுக்கு தீா்வு தடுப்பூசி செலுத்திக் கொள்வது மட்டுமே. எந்தவித அச்சமின்றி பொதுமக்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.

ஆக்சிஜன் உற்பத்திக்கு ஸ்டொ்லைட் ஆலை திறக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, தற்போதைய கரோனா பரவல் நிலையைக் கருத்தில் கொண்டு மத்திய, மாநில அரசுகள் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க முன்வர வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com