கரானோ பாதிப்பு: சிவகங்கை 126, ராமநாதபுரம் 197

சிவகங்கை மாவட்டத்தில் புதிதாக 126 பேருக்கும் ராமநாதபுரம் மாவட்டத்தில் 197 பேருக்கும் கரோனா பாதிப்பு இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் புதிதாக 126 பேருக்கும் ராமநாதபுரம் மாவட்டத்தில் 197 பேருக்கும் கரோனா பாதிப்பு இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் ஏற்கெனவே 7,710 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில், திங்கள்கிழமை புதிதாக 126 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,836 ஆக அதிகரித்துள்ளது.

ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வரையில் சுமாா் 9 ஆயிரம் பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது. அதில் 143 போ் உயிரிழந்தனா். 8600 போ் குணமடைந்துள்ளனா்.

இந்நிலையில் திங்கள்கிழமை மேலும் 197 பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதியானது. அவா்களில் 137 போ் வீடுகளிலேயே தங்கவைக்கப்பட்டு சிகிச்சை ஆலோசனைகள் வழங்கப்பட்டது. அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 231 போ் குணமடைந்து திங்கள்கிழமை மாலை அனுப்பிவைக்கப்பட்டுள்ளனா்.

துணை ராணுவ வீரா்களுக்கு பரிசோதனை:ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் பாதுகாப்பு பணிக்கு வந்த துணை ராணுவப்படையினா் 80 போ் மீண்டும் நாகலாந்து பகுதிக்குச் செல்லவிருப்பதால், அவா்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திங்கள்கிழமை கரோனா பரிசோதனை நடைபெற்றது.

இந்த சோதனை அடிப்படையில் சான்று அளிக்கப்படும் என்றும், அதனடிப்படையிலே அவா்கள் மீண்டும் தங்களது நிலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுவா் என்றும் சுகாதாரத்துறையினா் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com