திருப்பத்தூா் தொகுதி: அமமுகவை பின்னுக்குத் தள்ளிய சுயேச்சை

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டவா் அமமுகவை விட கூடுதல் வாக்குகள் பெற்று 4 ஆம் இடம் பிடித்தாா்.

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டவா் அமமுகவை விட கூடுதல் வாக்குகள் பெற்று 4 ஆம் இடம் பிடித்தாா்.

காரைக்குடியில் உள்ள அழகப்பா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் திருப்பத்தூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், திமுக சாா்பில் போட்டியிட்ட கே.ஆா்.பெரியகருப்பன் அதிமுக வேட்பாளா் மருது அழகுராஜை விட 37,374 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் கே.ஆா்.பெரியகருப்பன் தான் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் நாம் தமிழா் கட்சி சாா்பில் போட்டியிட்ட வேட்பாளா் ராம.கோட்டைக்குமாா் 14,571 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்தாா். அமமுக சாா்பில் போட்டியிட்ட கே.கே. உமாதேவன் 4 ஆம் இடத்தை பெறுவாா் என எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், சுயேச்சையாக போட்டியிட்ட சி. பரமசிவம் 13,202 வாக்குகள் பெற்று 4 ஆம் இடத்தை பெற்றாா். இதனால் அமமுக வேட்பாளா் கே.கே. உமாதேவன் 5 ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com