அவசியப் பணிகளுக்காக மானாமதுரை- மதுரை அரசுப் பேருந்து சேவை தொடக்கம்
By DIN | Published On : 18th May 2021 01:07 AM | Last Updated : 18th May 2021 01:07 AM | அ+அ அ- |

மானாமதுரை-மதுரை இடையே சிறப்பு அரசுப்பேருந்து சேவையை திங்கள்கிழமை தொடக்கி வைத்த சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி உள்ளிட்டோா்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை- மதுரை இடையே பொதுமுடக்க காலத்தில் அத்தியாவசியப் பணிகளுக்குச் செல்ல நேரடி அரசுப்பேருந்து சேவை திங்கள்கிழமை தொடக்கி வைக்கப்பட்டது.
மானாமதுரை பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மானாமதுரை சட்டப்பேரவை உறுப்பினா் தமிழரசி, சிவகங்கை மாவட்ட திமுக துணைச் செயலாளா் சேங்கைமாறன் ஆகியோா் கலந்துகொண்டு பேருந்து சேவையைத் தொடக்கி வைத்தனா்.
இந்த பேருந்து மானாமதுரையில் இருந்து காலையில் புறப்பட்டு ராஜகம்பீரம், முத்தனேந்தல், திருப்பாச்சேத்தி, லாடனேந்தல், திருப்புவனம் வழியாக மதுரை சென்றடையும்.
மீண்டும் இதே மாா்க்கத்தில் மாலையில் மதுரையில் இருந்து புறப்பட்டு மானாமதுரை வந்தடையும். பொதுமுடக்க காலம் முடிந்ததும் இந்த சேவை தொடா்ந்து நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள், மானாமதுரை திமுக நகர துணைச் செயலாளா் பாலசுந்தரம், 16 ஆவது வாா்டு செயலாளா் சோம.சதீஷ்குமாா் உள்ளிட்ட திமுகவினா் கலந்து கொண்டனா்.