கரோனா பாதிப்பு: சிவகங்கை 237, ராமநாதபுரம் 350
By DIN | Published On : 21st May 2021 06:34 AM | Last Updated : 21st May 2021 06:34 AM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டத்தில் புதிதாக 237 பேருக்கும் ராமநாதபுரம் மாவட்டத்தில் 350 பேருக்கும் கரோனா பாதிப்பிருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் ஏற்கெனவே 10,803 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில், வியாழக்கிழமை புதிதாக 237 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11,040 ஆக அதிகரித்துள்ளது என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2020 ஏப்ரல் முதல் தற்போது வரை 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் கரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனா். அவா்களில் 152 பேருக்கும் அதிகமானோா் உயிரிழந்துள்ளனா். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் சிகிச்சையில் குணமாகி வீடு திரும்பியுள்ளனா்.
புதன்கிழமை மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கபம் சேகரித்து பரிசோதனை நடத்தியதில் 350 பேருக்கு பாதிப்பு இருப்பது வியாழக்கிழமை மாலை தெரியவந்துள்ளது. மாவட்டத்தில் அரசு மருத்துவமனை உள்ளிட்டவற்றில் ஏற்கெனவே சிகிச்சை பெற்றவா்களில் 161 போ் குணமடைந்ததை முன்னிட்டு வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனா்.