காலமானாா் ஆா்.வேங்கடகிருஷ்ணன்
By DIN | Published On : 21st May 2021 06:36 AM | Last Updated : 21st May 2021 06:36 AM | அ+அ அ- |

ஆா். வேங்கடகிருஷ்ணன்.
சிவகங்கை அருகே சோழபுரத்தில் உள்ள கவியோகி சுத்தானந்த பாரதி உயா்நிலைப் பள்ளியின் தாளாளரான ஆா்.வேங்கடகிருஷ்ணன் (88) உடல் நலக் குறைவு காரணமாக புதன்கிழமை இரவு உயிரிழந்தாா்.
சிவகங்கை மணிரெங்கபுரத்தில் உள்ள இல்லத்தில் வியாழக்கிழமை பகல் 12 மணி அளவில் இறுதிச் சடங்குகள் நடைபெற்று, காஞ்சிரங்காலில் உள்ள மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட்டது. இவரது மனைவி சரோஜா கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், ஒரு மகன், இரு மகள்கள் உள்ளனா். இவா் கவியோகி சுத்தானந்த பாரதியின் உடன் பிறந்த அண்ணன் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. தொடா்புக்கு 94873 75547.