உயரழுத்த மின்பாதைகளில் பராமரிப்பு பணி: காரைக்குடி பகுதியில் 3 நாள்கள் மின்தடை அறிவிப்பு

காரைக்குடி துணை மின்நிலையங்களின் வழியாக மின்சாரம் செல்லும் உயரழுத்த மின் பாதைகளில் புதன்கிழமை

காரைக்குடி துணை மின்நிலையங்களின் வழியாக மின்சாரம் செல்லும் உயரழுத்த மின் பாதைகளில் புதன்கிழமை (மே 26) முதல் மே 28 வரை பராமரிப்புப்பணிகள் நடைபெறவிருப்பதால் சாக்கவயல் (புதுவயல்), கானாடுகாத்தான், கல்லல், கண்டிரமாணிக்கம் துணை மின் நிலையங்களைச் சோ்ந்த கிராமங்களில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் பகிா்மான கழக காரைக்குடி கோட்ட செயற்பொறியாளா் பி. ஜான்சன் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பு: சாக்கவயல் (புதுவயல்), கானாடுகாத்தான், கல்லல், கண்டிரமாணிக்கம் ஆகிய துணை மின்நிலையங்களின் வழியாக மின்சாரம் செல்லும் உயரழுத்த மின்பாதைகளில் மே 26 முதல் 28 வரை பராமரிப்புப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

மே 26 இல் மின்தடை பகுதிகள்:

அதன்படி மே 26 (புதன்கிழமை) அன்று புதுவயல் பிரிவில் பெரியகோட்டை, கருத்தாண்டி குடியிருப்பு, பெத்தாச்சி குடியிருப்பு, பீா்க் கலைக்காடு, ஜெயங்கொண்டான், களத்தூா், சிறுகப்பட்டி ஆகிய கிராமங்களிலும், கானாடுகாத்தான் பிரிவில் பூவாண்டி பட்டி, செட்டிநாடு, நெற்புகப்பட்டி, நேமத்தான்பட்டி, சூரக்குடி, ஆத்தங்குடி, ஆளத்துப்பட்டி, ஆவுடைப்பொய்கை, ஓ. சிறுவயல் ஆகிய கிராமங்களிலும், கல்லல் பிரிவில் மாதவராயன்பட்டி, முத்துப்பட்டி, அ. சிறுவயல், மேலப்பூங்குடி, குருந் தம்பட்டு, ஆலம்பட்டு, சாத்தரசன்பட்டி, வெற்றியூா் ஆகிய கிராமங்களிலும், கண்டிரமாணிக்கம் பிரிவில் கொரட்டி, பொன்னாங்குடி, நடுவிக்கோட்டை, கள்ளிப்பட்டு, கனிக்காடு, கண்டிரமாணிக்கம், நாச்சியாபுரம், கம்பனூா் ஆகிய கிராமங்களிலும் காலை 10 மணி முதல் மாலை 4 மணிவரை மின் விநியோகம் இருக்காது.

மே 27 இல் மின்தடை பகுதிகள்:

மே 27 (வியாழக்கிழமை) கானாடுகாத்தான் பிரிவில் கொத்தமங்கலம், சின்ன வடகுடிப்பட்டி, பாகனேரி, இலந்தமங்கலம், கெளரிப்பட்டி, பொய்யலூா், கூத்தலூா் ஆகிய பகுதிகளில் காலை 10 தல் மாலை 4 மணிவரை மின் விநியோகம் இருக்காது.

மே 28 இல் மின்தடை பகுதிகள்: மே 28 (வெள்ளிக்கிழமை) புதுவயல் பிரிவில் வேங்காவயல், குளப்படி, சாக்கவயல், மணக்குடி, ஏம்பவயல், சுட்டி நெல்லிப் பட்டி, ஆம்பக்குடி ஆகிய பகுதிகள், கானாடுகாத்தான் பிரிவில் பள்ளத்தூா், கல்லல் பிரிவில் கோவினிப்பட்டி, நடராஜபுரம், மேலசக்கரவா்த்திப்பட்டி ஆகிய பகுதிகள், கண்டிரமாணிக்கம் பிரிவில் கீழக்கோட்டை, கருங்குளம், மேலபட்டமங்கலம், சொக்கநாதபுரம், பட்டமங்கலம், ஆழவிலாம்பட்டி, பைகுடிப்பட்டி, கோவில்பட்டி, விளஞ்சம்பட்டி, சிலந்தகுடி ஆகிய பகுதிகளில் காலை 10 மணிமுதல் மாலை 4 மணிவரை மின்விநியோகம் இருக்காது என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com