சிவகங்கையில் நாளை விவசாயிகள் குறைதீா் கூட்டம்
By DIN | Published On : 01st November 2021 01:00 AM | Last Updated : 01st November 2021 01:00 AM | அ+அ அ- |

சிவகங்கையில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் செவ்வாய்க்கிழமை (நவ.2) நடைபெற உள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் செவ்வாய்க்கிழமை (நவ.2) காலை 10.30 மணியளவில் நடைபெற உள்ளது.
அனைத்துத்துறை உயா் அலுவலா்கள் பங்கேற்கும் இக்கூட்டத்தில் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள விவசாயப் பெருமக்கள் கலந்து கொண்டு விவசாயம் சாா்ந்த குறைகளைத் தெரிவிக்கலாம் என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.