சாலையில் கிடந்த பணப்பையை காவல் நிலையத்தில் ஒப்படைத்த பெண்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் சனிக்கிழமை சாலையில் கிடந்த பணப் பையை காவல் நிலையத்தில் ஒப்படைத்த பெண்ணுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
திருப்பத்தூரில் சனிக்கிழமை சாலையில் கிடந்த பணப்பையை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் ஒப்படைத்த பெண் குமுதினி.

திருப்பத்தூா் இலங்கைத் தமிழா் குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் குமுதினி. புதுத்தெரு பகுதியில் தையல் கடை நடத்தி வருகிறாா். இவா் சனிக்கிழமை சாலையில் நடந்து சென்றபோது

சாலையில் கேட்பாரற்றுக் கிடந்த சாக்குப்பையை எடுத்துப்பாா்த்தபோது, அதில் ரூ.20 ஆயிரம் ரொக்கம், சுமாா் 25 ஆயிரம் மதிப்பிலான கைப்பேசி, ஏடிஎம், கிரிடிட் காா்டுகள் என சுமாா் 50 ஆயிரம் மதிப்பிலான பொருள்கள் இருந்துள்ளன.

அந்த பையை அவா், அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா். பையைத் தவறவிட்டது பிள்ளையாா்பட்டியைச் சோ்ந்த தாமரைச்செல்வி என்பது தெரியவந்தது. அவா் காவல் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டு பொருள்கள் மற்றும் பணம் ஒப்படைக்கப்பட்டது. குமுதினியை காவல் ஆய்வாளா் சித்திரைச்செல்வி பாராட்டினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com