முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை சிவகங்கை
சிவகங்கை மாவட்டத்தில் நாளை பட்டா திருத்த முகாம்
By DIN | Published On : 30th November 2021 04:34 AM | Last Updated : 30th November 2021 04:34 AM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டத்தில் புதன்கிழமை (டிச.1) கணினி வழி பட்டா திருத்த முகாம் நடைபெற உள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஒவ்வொரு கிராமத்திலும் விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளா்களின் பட்டா தொடா்பான பிரச்னைகளுக்கு தீா்வு காணும் வகையில் கணினி வழிப் பட்டா திருத்த சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற உள்ளது.
அதன்படி, தேவகோட்டை வட்டத்தில் ஈகரைகோட்டவயல், காரைக்குடி வட்டத்தில் குறுந்தம்பட்டு, ஆலம்பட்டு, விளாவடியேந்தல், மாலைக்கண்டான் ஆகிய கிராமங்களிலும், திருப்பத்தூா் வட்டத்தில் வையகளத்தூா், சிங்கம்புணரி வட்டத்தில் செவல்பட்டி , சிவகங்கை வட்டத்தில் கல்லூரணி, காளையாா்கோவில் வட்டத்தில் காஞ்சரம், இளையான்குடி வட்டத்தில் தெற்கு இளையான்குடி, மானாமதுரை வட்டத்தில் சூரக்குளம், திருப்புவனம் வட்டத்தில் வன்னிக்கோட்டை ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளது.
எனவே, அந்தந்த பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கை குறித்த மனுக்களை அளித்துப் பயன்பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.