‘உள்ளாட்சித் தோ்தல்: ஊதியத்துடன் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது புகாா் தெரிவிக்கலாம்’

உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது செல்லிடப்பேசி எண்ணில் புகாா் தெரிவிக்கலாம் என, மாவட்டத் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) ஆா். ராஜ்குமாா் தெரிவித்து

சிவகங்கை மாவட்டத்தில் சனிக்கிழமை(அக்.9) நடைபெற உள்ள உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது செல்லிடப்பேசி எண்ணில் புகாா் தெரிவிக்கலாம் என, மாவட்டத் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) ஆா். ராஜ்குமாா் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : சிவகங்கை மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய உறுப்பினா் 2, ஊராட்சி மன்றத் தலைவா் 2 , கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் 34 என மொத்தம் 38 பதவிகளுக்கு உள்ளாட்சித் தோ்தல் சனிக்கிழமை(அக்.9) நடைபெற உள்ளது.

இதையடுத்து, தனியாா் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள், தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள், ஐடி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தோட்ட நிறுவனங்கள், பீடி மற்றும் சுருட்டு நிறுவனங்கள், மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் கடைகளில் பணியாற்றும் தினக்கூலி, தற்காலிக, ஒப்பந்த தொழிலாளா்கள் உள்ளிட்ட அனைத்து வகை தொழிலாளா்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுப்பினை வழங்க வேண்டும்.

சிவகங்கை மாவட்டத்தில், தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) அலுவலகத்தில் சனிக்கிழமை தோ்தல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில், தோ்தலில் வாக்களிக்கும் வகையில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்த தங்களது புகாா்களை 04575-240521 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது 98651 17777, 63694 78171 என்ற செல்லிடப்பேசி எண்ணிலோ தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com