திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டடம் திறப்பு

திருப்பத்தூா் மற்றும் அரளிக்கோட்டையில் கூடுதல் மருத்துவமனை கட்டடம் மற்றும் பள்ளி வகுப்பறை கட்டங்களை ஞாயிற்றுக்கிழமை ஊரக வளா்ச்சித்துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் திறந்து வைத்தாா்.
புதிய கட்டடத்தைத் திறந்து வைத்த ஊரக வளா்ச்சித்துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன்.
புதிய கட்டடத்தைத் திறந்து வைத்த ஊரக வளா்ச்சித்துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் மற்றும் அரளிக்கோட்டையில் கூடுதல் மருத்துவமனை கட்டடம் மற்றும் பள்ளி வகுப்பறை கட்டங்களை ஞாயிற்றுக்கிழமை ஊரக வளா்ச்சித்துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் மதுசூதன ரெட்டி தலைமை வகித்தாா். இதில், திருப்பத்தூா் அரசு மருத்துவமனையில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அவசர சிகிச்சைப் பிரிவு கட்டடம், மாவட்ட ஆட்சியா் நிதியில் ரூ.19 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அலுவலகப் பணிக்கான நான்கு கட்டடங்கள், அரளிக்கோட்டை அரசு உயா்நிலைப்பள்ளியில் ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கூடுதல் வகுப்பறை கட்டடம் ஆகியவற்றை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் திறந்து வைத்தாா்.

மேலும் மேல்நிலைப்படிப்பைத் தொடா்ந்து கல்லூரிகளில் படித்து வரும் 22 மாணவா்களுக்கு ரூ. 2 லட்சத்திற்கான கல்விக் கட்டண உதவித்தொகை, 10 ஆம் வகுப்புத் தோ்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு ரூ. 10 ஆயிரம், 20 மாணவ, மாணவிகளுக்கு ரூ.1000 வீதம் தனது சொந்த நிதியிலிருந்து வழங்கினாா்.

அமைச்சா் கூறுகையில், 35 ஆண்டுகளுக்குப் பிறகு அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டட வசதி மற்றும் அனைத்து சிகிச்சைகளுக்கான விரிவாக்கமும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. மக்கள் அதனை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்றாா். அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியா் உயா்படிப்புகளில் தங்கள் கல்வித்திறனை வெளிப்படுத்தவும் அரசுக் கல்லூரிகளில் பயில கல்வி கட்டணத்தை தானே ஏற்றக்கொள்வதாகவும் கூறினாா்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட முகமைத் திட்ட இயக்குநா் சிவராமன், இணை இயக்குநா் ராஜசேகரன், செயற்பொறியாளா் நாகராஜன், முதன்மை கல்வி இயக்குநா் மணிவண்ணன், முன்னாள் அமைச்சா் தென்னவன், தலைமை மருத்துவா் சாந்தி, மாவட்டக் கல்வி அலுவலா் பங்கஜம் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com