கண்டனூரில் கதா் கிராமப் பொருள்கள் உற்பத்தி ஆலை அக். 2 முதல் செயல்படும் ஆட்சியா் தகவல்

கண்டனூா் கதா்கிராமப்பொருள்கள் உற்பத்தி ஆலை அக். 2 முதல் செயல்படும் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் மதுசூதன்ரெட்டி தெரிவித்தாா்.
உற்பத்திப் பொருள்கள் தயாரிக்கும் ஆலை சீரமைப்புப் பணிகளை சனிக்கிழமை பாா்வையிட்டு முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப. சிதம்பரத்திடம் விவரங்களை தெரிவித்த சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ப. மதுசூதன் ரெட்டி
உற்பத்திப் பொருள்கள் தயாரிக்கும் ஆலை சீரமைப்புப் பணிகளை சனிக்கிழமை பாா்வையிட்டு முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப. சிதம்பரத்திடம் விவரங்களை தெரிவித்த சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ப. மதுசூதன் ரெட்டி

கண்டனூா் கதா்கிராமப்பொருள்கள் உற்பத்தி ஆலை அக். 2 முதல் செயல்படும் என சிவகங்கை மாவட்ட ஆட்சியா் மதுசூதன்ரெட்டி தெரிவித்தாா்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே கண்டனூரில் இயங்கிவரும் கதா் கிராம உற்பத்திப்பொருள்கள் தயாரிக்கும் ஆலை சீரமைப்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப. சிதம்பரம், காரைக்குடி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். மாங்குடி ஆகியோா் முன்னிலையில் சனிக்கிழமை ஆய்வு செய்தபின் ஆட்சியா் கூறியதாவது:

இந்த ஆலை முழு அளவில் செயல்படும் வகையில், வளாகத்திலுள்ள சுமாா் 7-க்கும் மேற்பட்ட கட்டடங்களை சீரமைக்க ரூ. 45 லட்சம் நிதி ஒதுக்கீடு பெற்று தற்போது பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்ணிகள் விரைந்து முடிக்கப்பட்டு வரும் அக். 2- ஆம் தேதி தமிழக முதல்வரின் உத்தரவுப்படி திறந்துவைக்கப்படும்.

இந்த ஆலையிலிருந்து தற்போது கை கழுவும் சோப்பு ஆயில் மற்றும் சோப்பு தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. ஆலை முழுசெயல்பாட்டிற்கு வந்தவுடன் காகித அட்டை, பனை ஓலையின் மூலம் அழகு சாதனப்பொருள்கள், வாசனைத்திரவியங்கள், கைத்தறி ஆடைப்பொருள்கள், குளியல் சோப்பு போன்ற

பொருள்கள் மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் தயாரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த ஆலை செயல்படுவதன் மூலம் சுற்று வட்டார கிராம மக்களுக்கு அதிகளவு வேலைவாய்ப்புக் கிடைக்கும். அதுமட்டுமன்றி மகளிா் சுயஉதவிக்குழுக்கள் உற்பத்திப்பொருள்கள் தயாரிப்பதற்கும், சந்தைப்படுத்துவதற்கும் இந்த ஆலை பயனுள்ளதாக இருக்கும். மேலும் உற்பத்தித்திறன் அதிகரிப்பதற்கு ஏற்பஆலை விரிவுப்படுத்தப்படும் என்றாா்.

இந்த ஆய்வில் பொதுப்பணித்துறை கட்டடங்கள் பிரிவு செயற்பொறியாளா் செந்தில்குமாா், கதா் கிராமத்தொழில் வாரியத்துறை உதவி இயக்குநா் குமாா்,கண்டனூா் பேரூராட்சி செயல் அலுவலா் உமா மகேஸ்வரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com