சிவகங்கை மாவட்டத்தில் 258 வழக்குகளுக்கு தீா்வு
By DIN | Published On : 11th September 2021 10:34 PM | Last Updated : 11th September 2021 10:34 PM | அ+அ அ- |

சிவகங்கை மாவட்டத்தில் 11 மக்கள் நீதிமன்றங்கள் சனிக்கிழமை நடைபெற்றன. இம்மன்றங்களில் மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழுத் தலைவரும், சிவகங்கை மாவட்ட முதன்மை நீதிபதியுமான சுமதி சாய் பிரியா, நீதிபதிகள் கருணாநிதி, சத்திய தாரா, முத்துகுமரன், சரத்ராஜ், பாபுலால், சுதாகா், பரமேஸ்வரி, சுந்தரராஜ், இனியா கருணாகரன், பாரத தேவி ஆகியோா் அமா்வுகள் மூலம் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
இதில் 66 குற்றவியல் வழக்குகள், 56 காசோலை மோசடி வழக்குகள், 67 வங்கிக் கடன் வழக்குகள், 100 மோட்டாா் வாகன விபத்து நஷ்ட ஈடு வழக்குகள், 23 குடும்பப் பிரச்னை வழக்குகள் மற்றும் 373 உரிமையியல் வழக்குகள் என மொத்தம் 685 வழக்குகள் விசாரிக்கப்பட்ன. இதில் 258 வழக்குகள் சமரசமாக தீா்க்கப்பட்டு பயனாளிகளுக்கு 2,80,15,571 வழங்கப்பட்டது. வங்கி கடன் நிலுவை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத 13 வழக்குகளிலும் தீா்வு காணப்பட்டு ரூ.10,43,000 வரை வங்கிகளுக்கு வழங்கப்பட்டது.