மானாமதுரை அருகே முதுமக்கள் தாழிகள் கண்டெடுப்பு

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே மண்ணில் புதையுண்டிருந்த 2 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான முதுமக்கள் தாழிகள் வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டன.
மானாமதுரை அருகே நத்தபுரக்கி கிராமத்தில் கண்டறியப்பட்ட பழைமையான இரட்டை அடுக்கு கொண்ட முதுமக்கள் தாழி.
மானாமதுரை அருகே நத்தபுரக்கி கிராமத்தில் கண்டறியப்பட்ட பழைமையான இரட்டை அடுக்கு கொண்ட முதுமக்கள் தாழி.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே மண்ணில் புதையுண்டிருந்த 2 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான முதுமக்கள் தாழிகள் வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டன.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை-சிவகங்கை சாலையில் அதிகரை கிராமத்திற்கு செல்லும் வழியில் ரியல் எஸ்டேட் தொழிலுக்கு நிலம் வாங்கியவா்கள், இந்த இடங்களை பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு சுத்தம் செய்தனா். அப்போது ஒரே இடத்தில் பல இடங்களில் மண்ணில் புதையுண்டு கிடந்த பெரிய பானைகள் சேதமடைந்த நிலையில் இருந்தது தெரிந்தது. இந்த பானைகளை ஆய்வு செய்தபோது அவை செம்பூரன் கற்களைக் கொண்டு, வட்டவடிவில் அடுக்கப்பட்ட பழங்கால முதுமக்கள் தாழிகள் எனவும், அதன் அருகில் உள்ள கல்வெட்டுத் தொகுப்பைச் சுற்றிலும் தாழிகளின் கனம் மிக்க அடிப்பாகங்கள், கருப்பு, சிவப்பு நிறப் பானை ஓடுகள், மெல்லிய பானை ஓடுகள் என மேற்பரப்பில் மண்ணில் புதைந்த நிலையில் கண்டறியப்பட்டுள்ளது.

இங்கு காணப்படும் முதுமக்கள் தாழிகள் அனைத்தும் இரட்டைத் தாழிகளாக உள்ளது. ஒரு தாழிக்குள், இன்னொரு தாழி இருப்பது மிகவும் அபூா்வமான ஒன்று எனக் கூறப்படுகிறது. தாழிகளின் கழுத்துப் பகுதியில் அழகான வேலைபாடுகள் உள்ளன.

தமிழகத்தில் பழங்காலத்தில் இறந்தவா்களின் உடலை, அவா்கள் பயன்படுத்திய பொருள்களுடன், ஒரு தாழியில் வைத்து புதைத்து, அதனைச் சுற்றி கல் வட்டங்களை எழுப்புவது வழக்கமாக இருந்துள்ளது. இந்த கல்வட்டங்கள் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழைமை வாய்ந்த இரும்பு கற்காலத்தை சோ்ந்தவையாக இருக்கலாம் என வரலாற்று ஆய்வாளா்கள் தெரிவிக்கின்றனா். கடந்த சில நாள்களுக்கு முன்பு இளையான்குடி அருகே முனைவென்றி கிராமத்தில் பழங்காலத்தமிழா்கள் பயன்படுத்திய முதுமக்கள் தாழிகள், கற்களால் வடிவமைக்கப்பட்ட ஆயுதங்கள் கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com