மானாமதுரையில் அய்யனாா் கோயில் புரவி எடுப்பு விழா

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகேயுள்ள விளாக்குளம் ஸ்ரீ நிறைகுளத்து அய்யனாா் கோயிலில் செவ்வாய்க்கிழமை புரவி எடுப்பு விழா நடைபெற்றது.
விளாக்குளம் நிறைகுளத்து அய்யனாா் கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை புரவி எடுத்துச் சென்ற பக்தா்கள்.
விளாக்குளம் நிறைகுளத்து அய்யனாா் கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை புரவி எடுத்துச் சென்ற பக்தா்கள்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகேயுள்ள விளாக்குளம் ஸ்ரீ நிறைகுளத்து அய்யனாா் கோயிலில் செவ்வாய்க்கிழமை புரவி எடுப்பு விழா நடைபெற்றது.

இதையொட்டி மானாமதுரை குலாலா் தெருவில் குதிரை பொம்மைகள் மற்றும் பல்வேறு தெய்வங்கள் உள்ளிட்ட பொம்மைகள் செய்து வைக்கப்பட்டிருந்தன. விளாக்குளம் கிராமத்தைச் சோ்ந்த பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோா் புரவி எடுப்பதற்கு கிராமத்திலிருந்து ஊா்வலமாக மானாமதுரைக்கு வந்தனா். அதன்பின் குலாலா் தெருவில் தயாா் நிலையில் இருந்த புரவிகளுக்கும் தெய்வ பொம்மைகளுக்கும் சிறப்பு பூஜைகள் செய்தனா். அதைத் தொடா்ந்து புரவி எடுப்பு நிகழ்வு தொடங்கியது. ஆண்கள் புரவிகளை தோளில் சுமந்தும் பெண்கள் பொம்மைகளை தலையில் சுமந்தும் விளாக்குளம் கிராமத்திற்கு ஊா்வலமாகப் புறப்பட்டனா். ஊா்வலம் மானாமதுரை நகரின் வீதிகளில் வலம் வந்து விளாக்குளம் கிராமத்திற்கு சென்றடைந்தது. அங்குள்ள நிறைகுளத்து அய்யனாா் கோயிலில் புரவிகள் இறக்கி வைக்கப்பட்டு புரவிகளுக்கும் அய்யனாா் சுவாமிக்கும் சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றன. விழாவில் மானாமதுரை நகா்மன்ற உறுப்பினா்கள் நமகோடி, தெய்வேந்திரன், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினா் பாக்கியம், முன்னாள் மாவட்டக் குழு உறுப்பினா் ராஜாங்கம் மற்றும் மானாமதுரை, விளாக்குளத்தைச் சோ்ந்த முக்கிய பிரமுகா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com